Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாரீஸில் பயங்கர வெடிவிபத்து!

பாரீஸ்: பிரான்ஸ் நாட்டு தலைநகரமான பாரீஸின் மத்திய பகுதியில் பயங்கர  வெடி விபத்து  நிகழ்ந்துள்ளது. எரிவாயு கசிவால் இந்த விபத்து நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், 5 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக முதல் கட்ட செய்திகள் கூறுகின்றன.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இது பிரான்சில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தச் சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அதற்கான காரணமும் எந்த அமைப்பு இந்த வெடிப்பை நிகழ்த்தியது என்பது குறித்தும் உரிய தகவல்கள் தெரியவில்லை.

கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த பாரீஸ் நகர தீவிரவாதத் தாக்குதலில் 130 பேர் பலியாயினர். அதே போல கடந்த மாதம் 22 ம் தேதி பெல்ஜியம் நாட்டில் நடத்தப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதத் தாக்குதலில்  31 பேர் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ