Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'நாட்டையே கொளுத்திவிடுவோம்': வடகொரியாவின் மிரட்டல் வைரல் வீடியோ!

ங்களின் கோரிக்கைகள்  ஏற்கப்படாவிட்டால் தென்கொரியா சாம்பலாகும் என்று மிரட்டல் விடுத்துள்ள வடகொரியா, தென் கொரிய அதிபரின் இல்லம் தாக்கப்பட்டு தீ பற்றி எரியும் சித்தரிப்பு வீடியோ ஒன்றையும் சமூக வலைதளங்களில் பரவவிட்டு கொரிய தீபகற்பத்தில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கம்யூனிச நாடான வட கொரியா, தொடர்ந்து ஏவுகணைகள் மற்றும் அணுஆயுத  சோதனை நடத்தி வருகிறது. இது தென்கொரியா,  ஜப்பான் உள்ளிட்ட  நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.  இதனால் கொரிய தீபகற்பகத்தில் பதட்டம் உருவாகியுள்ளது. இந்நிலையில் இதற்கு அமெரிக்காவும்  மற்றும் ஐ.நா. சபையும்  கண்டனம்  தெரிவித்தன.
          
       

அதனைத் தொடர்ந்து வடகொரியா  மீது பொருளாதார தடையும்  விதிக்கப்பட்டது. ஆனால் அதை பொருட்படுத்தாத வட கொரியா தொடர்ந்து தனது மிரட்டல் போக்கில் சென்றுகொண்டுள்ளது.இது உலக நாடுகளைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், வடகொரியாவின் அரசு  ஊடகமான டி.பி.ஆர்.கே. வெளியிட்டு உள்ள செய்தி ஒன்றில்,

"15 வருடங்களுக்கு முன்னர் 3 பேர் நடத்திய தாக்குதலில் 3 ஆயிரம் பேர் பலியாகினர்.
இது அமெரிக்காவுக்கு மறக்க முடியாத சம்பவமாக அமைந்தது. ஆனால் தொடங்கவுள்ள  இறுதி யுத்தத்தின் வெளிப்பாடாக வரலாற்றில் இருந்தே அமெரிக்கா துடைத்து  எறியப்படும்

இந்த தாக்குதல் தொடர்பாக கவலைப்படுவதற்கு கூட அவர்களுக்கு நேரம் இல்லாமல் செய்துவிடுவோம். அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மற்றும் பென்டகனை, வடகொரியாவின் சக்தி மிகுந்த ஏவுகணை மற்றும் ஆயுதங்கள் தரை வழியாகவும், வான்வழியாகவும், கடல் வழியாகவும் குறி வைத்துள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தென் கொரியா அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான ‘புளூ ஹவுஸ்’ மாளிகையை வடகொரியா ஏவுகணைகளால் தாக்கித் தகர்க்கும் வீடியோவை வடகொரியா அரசு தற்போது வெளியிட்டு கூடுதல் போர்ப் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ