Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உக்ரைனில் இந்திய மருத்துவ மாணவர்கள் 2 பேர் படுகொலை!

உக்ரைனில் 2 இந்திய மருத்துவ மாணவர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

உக்ரைனில் உள்ள உல்கோரோட் மருத்துவக் கல்லூரியில்,  இந்திய மாணவர்கள் மூன்று பேர் இன்று அதிகாலை 3 மணியளவில்,  உக்ரைன் நபர்களால் கத்தியால் குத்தப்பட்டு உள்ளனர். இச்சம்பவத்தில் இந்திய மாணவர்கள் பிரானாவ் சயின்தில்யா மற்றும் அன்குர் சிங் ஆகியோர் உயிரிழந்தனர். இதில் காயம் அடைந்த மாணவர் இந்திரஜித் சிங் சவுகான்,  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மூன்று மாணவர்களின் பாஸ்போர்ட், ஆவணங்கள் மற்றும் ரத்தக் கறை படிந்த கத்தி ஆகியவை உக்ரைன் நபர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களிடம் பேசி உள்ளதாக கூறியுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், உடல்களை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தை உக்ரைன் வெளியுறவுத் துறையிடம் எடுத்து சென்றுள்ள இந்திய தூதரகம், இந்திய மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இந்திரஜித் சிங் அளித்த வாக்குமூலத்தின்படி 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ