Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

செல்ஃபிக்காக 1 லட்சம் ஏக்கர் வனப்பகுதியை தீக்கிரையாக்கிய நபர்!


‘செல்ஃபி’ எடுப்பதற்காக ஒரு லட்சம் ஏக்கர் வனப்பகுதியை தீக்கிரையாக்கிய நபருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனையும், 60 மில்லியன் டாலர் அபராதமும் விதித்து அமெரிக்க நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

கலிபோர்னியா மாகாணத்தில் வசிப்பவர்கள், கடந்த 2014-ம் ஆண்டு நிகழ்ந்த மிக மோசமான தீ விபத்தை மறந்திருக்க மாட்டார்கள். இதே மாகாணத்தை சேர்ந்த ஓய்னி ஆலன் ஹட்ஸ்மேன் (39) என்பவர்,  Sierra Nevada மலைப்பகுதிக்கு கடந்த 2014-ம் ஆண்டு, செப்டம்பர் 13ம் தேதி சுற்றுலா சென்றுள்ளார். வனப்பகுதியில் உல்லாசமாக இருக்க வேண்டும் என்பதால், போகும் வழியில் மது பாட்டில்களையும் வாங்கி சென்றுள்ளார்.

பின்னர், வனப்பகுதியை அடைந்த பின்னர் உல்லாசமாக மது அருந்திய ஆலன், வித்தியசமாக ‘செல்ஃபி’ வீடியோ ஒன்றை எடுக்க நினைத்து அருகில் உள்ள காய்ந்துபோன இலைகளுக்கு தீவைத்துள்ளார். தனக்கு பின்னால் தீப்பற்றி எரிய, அதனுடன் சேர்ந்து சிரித்துக் கொண்டே வீடியோ எடுத்துள்ளார். ‘ஹலோ….நான் இப்போது வனப்பகுதியில் இருக்கிறேன். என்னை சுற்றி தீப்பற்றி எரிகிறது தெரிகிறதா?’ என சிரித்துக் கொண்டு பேசியுள்ளார்.

ஆனால், இதற்கு பிறகுதான் நிலைமை விபரீதமாகியுள்ளது. பற்றி எரிந்த தீ மளமளவென வனம் முழுவதும் பரவியுள்ளது. இந்த பார்த்து  அதிர்ச்சி அடைந்த ஆலன், உடனடியாக 911 என்ற எண்ணை தொடர்பு கொண்டு காவல்துறையினக்கு தகவல் அளித்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். காவல்துறையினருடன் 300 தீயணைப்பு வீரர்களுடன் விரைந்து வந்தனர். அவர்கள் 30 நாட்கள் கடுமையாக போராடி, தீ யை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால், இந்த தீ விபத்தால் சுமார் 1,00,000 ஏக்கர் வனப்பகுதி முற்றிலும் எரிந்து நாசமானது. வனப்பகுதியில் அமைந்திருந்த 100 கட்டடங்கள் சேதமானது. ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டனர்.

இந்த விபத்தை தொடர்ந்து  குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்தனர். தொடக்கத்தில் இந்த தவறை செய்யவில்லை என குற்றவாளி கூறியுள்ளார். ஆனால்,சில நாட்களுக்கு பிறகு தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர் அதற்காக நீதிபதிகளிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.

இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை நேற்று முன்தினம் நீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது, லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவு உள்ள வனப்பகுதியை முற்றிலுமாக சேதப்படுத்திய குற்றத்திற்காகவும், கட்டடங்கள் மற்றும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்திய குற்றத்திற்காகவும், அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 60 மில்லியன் டாலர் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ