Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உலக பூமி தினம்: நியூயார்க்கில் கார்களுக்கு தடா! #இயற்கையோடு இணை

லக பூமி தினமான இன்று, சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த, உலகம் முழுவதிலும் உள்ள சுற்றுச்சூழல் அமைப்புகள்  விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திவருகின்றன.

அந்த வகையில் நியூயார்க் நகரில், இன்று ஒருநாள் கார்களை துறந்து, உலக பூமி தினத்தைக் கொண்டாட அந்நாட்டு மக்கள் முடிவு செய்துள்ளனர்.

காற்று மாசினால் சுற்றுச்சூழல் பாதிப்படைவதை உணர்த்தும் விதமாக திட்டமிடப்பட்டுள்ள இந்நிகழ்வுக்கு, "கார் ஃப்ரீ எர்த் டே" எனப் பெயரிட்டுள்ளனர்.

தினமும் கார்களில் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் இன்று ஒருநாள் மட்டும், அவர்களின் கார்களை பார்க் செய்துவிட்டு, நடந்தோ அல்லது சைக்கிளில் பயணம் செய்தோ தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்வர். இதற்காக போக்குவரத்து நிறைந்த சில சாலைகள் மூடப்பட்டு அங்கு விழிப்புணர்வு தொடர்பான கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

"நியூயார்க் நகரம், மக்களுக்கு சிறந்த பொதுப்போக்குவரத்து சேவைகளை அளிக்கிறது. பேருந்துகள், ரயில்கள் போன்றவற்றை மக்கள் அதிகமாக பயன்படுத்தவேண்டும். இந்த பொதுப்போக்குவரத்து சேவையைப் பற்றி மக்கள் அறிந்து கொள்ள, இந்த ஒருநாள் உதவும். கார் ஓட்டுநர்கள் பலர், இன்று பொதுப் போக்குவரத்து சேவையை பயன்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது" என நியூயார்க் நகர்மன்ற உறுப்பினர்களில் ஒருவரும், கார் ஃப்ரீ டே நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குபவருமான டேனிஸ் ரோட்ரிக்வெஸ் கூறியுள்ளார்.

இந்த நிகழ்வை மேலும் ஊக்குவிக்கும் வகையில், சிட்டி பைக்ஸ் நிறுவனம், இலவச சைக்கிள் பயணங்களை மக்களுக்கு, ஆன்-லைன் பதிவு மூலமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

இதேபோல் கடந்த அக்டோபர் மாதம், ஃபிரான்ஸ் தலைநகரான பாரீஸில் "கார் ஃப்ரீ டே" கடைபிடிக்கப்பட்டது. அன்றைய தினம், பாரீஸ் நகரின் பல பகுதிகளில் நைட்ரஜன் டையாக்சைட் எனும் காற்றை மாசுபடுத்தும் வாயுவின் அளவு, 40 சதவீதம் வரை குறைந்தது குறிப்பிடத்தக்கது.

காற்று மாசுபடுதலை குறைக்கும் நியூயார்க்கின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது. மற்ற நாடுகளும் அதை நாட்கள் என்பதை வாரங்களாக்கி கடைபிடிப்பதுதான் பூமிதினத்தை கொண்டாட அவை தகுதிபெற்றதாக இருக்கும். 

- ஜெ. விக்னேஷ்
மாணவப் பத்திரிக்கையாளர்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close