Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

2500 ல் உலகம் எப்படி இருக்கும்? ஒரு மினியன் கற்பனை... #WhereIsMyGreenWorld

சிட்டி 4.4.4-ம், சட்டி 4.4.3-ம் இன்ஸ்டா கிராமத்துல மீட் பண்றாங்க. அப்போ நடக்கற நிகழ்கால செய்திகளைப் பற்றி பேசி அரட்டை அடிக்கிறாங்க. இவங்க இருக்கிறது கிபி 2500 என்பதால் நீங்கள் அவங்கப் பேசிக்கறத கேக்கனும்னா டைம் மெஷின்ல முதல்ல ஏறணும். டிக்கெட்  ஃப்ரீதான். பெல்ட்டை போட்டு லாக் பண்ணிக்கோங்க, கரம் சிரம் வெளியே நீட்டாதீங்க. கிளம்பப் போறோம். வந்து சேர்ந்துட்டோம்.
 
சிட்டியும் சட்டியும் என்னப் பேசிக்கிறாங்கன்னு பாப்போம்.
 
சிட்டி 4.4.4: 
 
அரிசி, கம்பு, சோளம்னு ஏதோ பழங்காலப் பயிராம், அதை எவனோ ஒருத்தன் தன் வீட்டு மொட்டை மாடியில பயிரிட்டு விருது வாங்கியிருக்கான்.  நான் என் மொட்டை மண்டையை சுரண்டி பாக்கறேன், இப்படி ஒரு ஐடியாவும் வர மாட்டேங்குது.
 
சட்டி 4.4.3:
 
அது என்ன சாதனை, நம்ம பய ஒருத்தன் 30 வயது வரை, உயிர்வாழ்ந்து வாட்ஸ்அப்பில் 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வாங்கிருக்கான். உனக்கு என்ன வயசு இப்போ?

சிட்டி 4.4.4: 
 
எனக்கு வயசு 9. ஆனா இப்பவே நட், போல்டு, சிப்பெல்லாம் ஆடுது,  என்ன பண்ண? அவன் உயிர் வாழக் காரணமே வேங்கைமான்னு ஒரு கிரகத்துக்குப் பக்கத்துல இருக்க தண்ணீர்ல ஒரு ஜூஸ் குடிச்சுதானாம். அந்தத் தண்ணீர் ஜூஸை மஸ்ரோ செயற்கைக் கோள் கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாடியே இவன் கண்டுபிடிச்சிருக்கான். 
 
சட்டி 4.4.3:
ஓ..... அதான் எலெக்‌ஷன் டைம் பாத்து நம்ம மத்திய அரசே கண்டுபிடிச்ச மாதிரி பீத்திக்கிட்டு அந்த கிரகத்துல இருந்து தண்ணீர், ஜூஸ் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்துவோம்னு அறிவிச்சிருக்கோ.
 
சிட்டி 4.4.4: 
 
ஆமாம், அப்படித்தான்னு நினைக்கிறேன். இன்னொரு விஷயம் தெரியுமா? நம்ம எல்லைக்குள்ள அத்துமீறி நுழைந்த ரோபோ தீவிரவாதிகளை நம்ம நாட்டு ரோபோ ராணுவம் தூக்கி அடிச்சிருக்கு பாத்துக்க. சிக்கின ஐந்து தீவிரவாதி ரோபோக்களோட சிப்பே வித்தியாசமா இருக்காம். அது என்னன்னு ஆராய்ச்சி பண்ணிட்டிருக்காங்களாம். 
 
சட்டி 4.4.3:
 
சரி அண்ணே, உலக நாடுகள் மொத்தமும் சேர்ந்து, அழிஞ்சு போன பூமியில புதையல் ஏதோ எடுக்க நம்ம கிரகத்தையும் பூமியையும் இணைக்கப் போறாங்களாம். ரயில் பாலம் பிஸ்தானிக் மெட்டல் டெக்னாலஜியாம்.  நம்ம நிறைய பேருக்கு வேலை கிடைக்குமாம்.
 
சிட்டி 4.4.4: 
 
வேலை கிடைச்சு சம்பாதிச்சு என்னத்த கிழிக்க. என் சிப்பு ஆடறது நின்னுடுமா, இல்லை நான் தான் 31 வருஷம் வரை வாழ்ந்து சாதிக்கப் போறனா. இந்த அரசையும் ஆட்சியும் மாத்தணும் அதுக்கு ஏதாவது பண்ணனும். 
 
சட்டி 4.4.3:
 
ஆமாம், இவனுங்க தொல்லை தாங்க முடியல. வர்ற எலெக்‌ஷன்ல எல்லாரும் கட்டாயம் ஓட்டு போடனுமாம். அதுக்கு ஒரு 'விர்ச்சுவல் டிஸ்ப்ளே' எல்லார் சிப்புக்கும் அனுப்புவாங்களாம். அதுல இருந்த இடத்துலருந்தே ஓட்டு போட்டுறலாம். ஓட்டு போட்டா, ஒரு டெரா பைட் மெமரி சேவர் இலவசமா தருவாங்களாம். 
 
 
சிட்டி 4.4.4: 
 
இதுதான் இங்க காமெடியே. இலவசங்கிற பேர்ல இவிங்க அறிவிக்கறதெல்லாம் பணமா தெரியலையாம் இந்த எலக்‌ஷன் கமிஷனுக்கு. ஆனா, ஆணி புடுங்கிற வேலை செய்ற ஏழை ரோபோட்,  தான் வாங்கின கடனை திருப்பி கொடுக்க கொண்டு போன பணத்தையெல்லாம் கைப்பற்றி விட்டாங்களாம்
 
சட்டி 4.4.3:
 
சரி, அதுக்கு நமக்கென்ன. நம்ம ஃப்யூசைப் பிடுங்காம இருந்தா சரி.  எங்க தெருவுல இன்னிக்கு ரோபாயி அம்மனுக்கு பவர் ஏத்துறாங்க. பாட்டுக் கச்சேரிலாம் இருக்கு. ரோபோ ரீட்டா ஆட்டம் இருக்கு நான் போறேன்.
 
சிட்டி 4.4.4:
 
ஆமா நானும் சீக்கிரம் போறேன். ஏன்னா பத்தாண்டுக்கு ஒரு தடவை எங்கிருந்தோ வர்ற திரவ மழை இன்னிக்கு பெய்யும்னு ரமணன் ஆராய்ச்சி மையத்துல சொல்லிருக்காங்க. அதுல ரோபோக்கள் நனைஞ்சா ஆயுள் குறைஞ்சுடுமாம். 
 
ஒகே பை... பை... நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்.....!
 
- ஜெ.சரவணன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close