Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐந்து நிமிடத்தில் உலகைச் சுற்றி வரலாம் வாங்க...! #WhereIsMyGreenWorld

உலகிலேயே வாழத் தகுதியற்ற நகரம் எது? உலகின் பணக்கார நாடு எது? உலகின் அழகான நகரம் எது? உலகின் மோசமான நாடு எது? அனைத்தையும் தெரிந்துகொள்ளும் ஒரு சுற்றுச்சூழல் சுற்றுலாவுக்குத் தயாராகுங்கள்.

இவை அனைத்தும் உலகின் சுற்றுச்சூழலையும், மாசுபாட்டையும், வெப்பமயமாதலையும் மையப்படுத்தி எடுக்கப்பட்டவை.இந்தியாவிலேயே சென்னை வாழத் தகுதியற்ற முதல் நகரமாகவும், உலகிலேயே மூன்றாவது வாழத் தகுதியற்ற இடமாகவும் உள்ளது.  அதிர்ச்சியைத் தருகிறதா? ஆனால் அதுதான் உண்மை.

இனி நீங்கள் உங்கள் பயணத்தைத் தொடரலாம்.

குறிப்பு: கர்சரை வலதுபுறம் நகர்த்தினால் பசுமையான விஷயங்களும், இடதுபுறம் வறட்சியான விஷயங்களும் இருக்கும்










சென்னையின் சுற்றுச்சூழல், சென்னைக்கு உள்ள சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்கள், இங்குள்ள வாழ்வியல் முறை பிரச்னைகள் என அனைத்தும் இதனை உறுதி செய்கின்றன.

 அதற்கு டிசம்பர் மாதத்தில் பெய்த மழையும், இப்போது வெளுத்தெடுக்கும் வெயிலும்  சாட்சியாக உள்ளன. ஆறு மாதத்தில் இப்படி சூழல் மாற்றம் வருவதிலிருந்து, விரைவில் சென்னைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில்தான் சுற்றுச்சூழலியல் இருக்கிறது. இதற்கு யாரைக் குற்றம் சொல்வது?

பிளாஸ்டிக்கையும், புகையையும், கழிவுகளையும் உற்பத்தி செய்யும் பெரு நிறுவனங்களையா? பெரு நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்த அரசையா அல்லது அந்தப் பொருட்களைப் புறக்கணிக்கத் தெரியாத, பயன்படுத்திவிட்டு கண்ட இடத்தில் கொட்டும் மக்களாகிய நம்மை சொல்வதா? நீங்களே சொல்லுங்கள்...
 

- ஜெ.சரவணன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ