Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நீரின்றி அணைந்த உலகு- மினி தொடர் நிறைவு #WhereIsMyGreenWorld


ரி முடிவாய் என்ன செய்வது என்றால், மறுபடியும் ஆரம்பத்துக்குச் செல்ல வேண்டியதுதான். தொடக்கத்தில் ஆறுகள் நீரால்தானே நிரம்பியிருந்தது. இப்போது நீருக்குப் பதில் கழிவுகளும் குப்பைகளும். அதற்குக் காரணம் நாம். கடல் என்பதன் அர்த்தம் கழிவுத்தொட்டி என்று மாறிப்போனது. அதற்குக் காரணம் நாம். குப்பைகளை அதற்கு உரிய இடத்தில் போடாமல் சாக்கடையில் வீசினோம். சாக்கடையின் விஸ்தீரணம் கடல் என்றானது. மழைநீரை சேமிக்க வழியின்றி தெருக்களை மூழ்கவிட்டோம். கழிவுகள் சுமந்து நீர் விரைந்தது கடல் நோக்கி. அசுத்தமடைந்த கடல் மூச்சுத்திணறிப் பேரழிவினை உருவாக்கியது. வினை விதைத்தோம், வினையையே அறுவடை செய்தோம்.

ஒரு விவசாயியைப் பார்த்து, 'நீ விவசாயம் செய்யாதே' என்பதுபோன்ற கொடுமை உலகில் வேறெதும் இல்லை. ஆனால் நாம் சொன்னோம். நிலங்களை ஆக்ரமித்தோம். ஃப்ளாட்கள் உருவாக்கினோம். மென்பொருள் கம்பெனிகளிடம் நம் நிலத்தை விட்டுக்கொடுத்தோம். வயல்வெளிகள் இழந்தவன் கதியற்றுப்போனான். நம் பாரம்பர்யம் தொலைந்து போவதைப் பற்றி எந்த விதக் கவலையுமில்லை. வானம் பார்த்து மழை வேண்டுபவனையே மறுத்தோம். ஆறுகளில் மணல் தோண்டினோம். நீரற்ற ஆற்றில் கிரிக்கெட் விளையாட பழக்கிவிட்டோம் நம் எதிர்காலத் தலைமுறையை. காடுகளை அழித்துக் கட்டடங்கள் கட்டினோம். மரங்கள் உமிழும் சுவாசங்கள் இன்றி மேகங்கள் களைப்படைந்தன. நீர் சுமக்க மறுத்து கலைந்தன. மழையும் இல்லை. பெய்யும் மழையை சேமிக்க வழியும் இல்லை. வறண்டது மனிதமும் உலகமும்.



கடற்கரையில் வாக்கிங் போகும் மனிதன், வசதியாய் ஒன்றை மறந்தான். நாம் வெளியிடும் கார்பன்டை ஆக்ஸைடை  உள்வாங்கி சுத்தம் செய்யும் மகத்தான பணியினைப் புரியும் கடலினை நாம் கொன்றோம். பின் எங்கிருந்து வரும் சுத்தமான காற்று? கடலினையும் அசுத்தம் செய்துவிட்டு காற்று வாங்க வாக்கிங் போகும் நம் மனநிலையை என்ன சொல்வது? ஆக்ஸிஜன் தரும் மரங்களை அழித்தோம். அசுத்தக் காற்றினை சுத்தம் செய்யும் கடலினைக் காணாமலடித்தோம். சுற்றுப்புறச்சூழலைத் தொலைத்துவிட்டு நம் எதிர்காலம் எங்கே இருக்கப்போகிறது? நம் எதிர்காலம் என்பது இயற்கை சார்ந்துதானே... அதை விடுத்து என்ன இருக்கப்போகிறது?

'எண்ணெய் எப்படி என்று 20-ம் நூற்றாண்டு தீர்மானித்தது. 21-ம் நூற்றாண்டு எப்படி என்பதைத் தண்ணீர் தீர்மானிக்கும்?' என்ற  பார்க் ஆக்டனின் வரியை மனதில் நிறுத்துவோம். உலகில் நீரினை சேர்ப்போம். நீரின்றி அணையாமல் உலகைக் காப்போம்.


- கணேசகுமாரன்    

எடிட்டர் சாய்ஸ்

MUST READ