Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே அணியினர்- பொன்சேகா மோதல்! (வீடியோ)

முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் இராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டது தொடர்பாக சரத் பொன்சேகா கூறிய கருத்தால் இலங்கை நாடாளுமன்றத்தில் கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திப் சமரசிங்க காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராஜபக்சே பாதுகாப்பு தொடர்பாக ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மற்றும் ராஜபக்சே ஆதரவு எம்பிக்கள் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், சபாநாயகர் கரு ஜயசூர்ய நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஐந்து நிமிடங்களுக்கு ஒத்தி வைத்தார்.
அவை நடவடிக்கைகள் மீண்டும் துவங்கியதையடுத்து, அவையின் மத்தியில் கூடிய துணை அமைச்சர் பாலித்த தேவப்பெரும மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர ஆகியோருக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.



இதையடுத்து அவையின் மத்தியில் கூடிய உறுப்பினர்கள் மோதலில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்தின் பதற்ற நிலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் நோக்குடன், அவை நடவடிக்கைகளை சபாநாயகர் கரு ஜயசூர்ய ஒத்தி வைத்ததோடு, இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close