Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஓடும் பேருந்தில் கொள்ளையடித்த வாலிபரை பந்தாடிய பெண் (வீடியோ)

சீனாவில் ஓடும் பேருந்தில் கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை இளம்பெண் ஒருவர் பந்தாடியுள்ளார்.

செல்போனில் கவனம் செலுத்திக்கொண்டே பேருந்தில் இளம்பெண் பயணித்துக் கொண்டிருக்கையில், அவருக்கு பின்னால் நிற்கும் வாலிபர், அவரது பையிற்குள் கையினை விடுகிறார். இதனை சற்றும் கவனிக்காத அவர், திடீரென பின்னால் திரும்பி பார்கையில் அந்த வாலிபரின் கையானது இவரது பையிற்குள் இருந்துள்ளது.

உடனே அந்த வாலிபரின் கையினை இறுகப்பிடித்துக்கொண்டு கூச்சலிடுகிறார். ஆனால் அருகில் இருந்தவர்கள் வேடிக்கை பார்க்கின்றனரே தவிர யாரும் உதவிக்கு வரவில்லை. ஆனால் அந்த பெண்ணே, கொள்ளையனை சரமாரியாக தாக்கினார். இதனை பேருந்தில் பயணித்த ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ