Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'ஜெ.,விடம் இருந்து பாடம் கற்கவும்..!'- வடக்கு மாகாணசபையில் ஒலித்த குரல்

 

"சட்டம்- ஒழுங்கை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்து நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது" என்று வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறினார்.

வடக்கு மாகாணசபையின் 52 வது கூட்டம், மாகாணசபை பேரவை செயலகத்தில் இன்று நடைபெற்றது. அப்போது, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களை கட்டுப்படுத்தக் கோரும் தீர்மானத்தை,  மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முன்மொழிந்தார்.

இதைத் தொடர்ந்து பேசிய அவர், " சட்டம்- ஒழுங்கை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்து நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டியதிருக்கின்றது. தமிழகத்தில் முதலமைச்சர் அழைத்தால் அனைத்து காவல்துறையினரும் மலர் செண்டுகளுடன் அவருடைய இருப்பிடத்திற்கு வந்து விடுகிறார்கள். அவ்வாறான நிலையை நாங்கள் இங்கே உருவாக்க வேண்டும். அதற்கு நமது முதலமைச்சர் நீதியரசராக இருப்பதைபோன்று இருந்து கொண்டு செய்ய முடியாது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தை பொறுத்தமட்டில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகளவில் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன. இதனை சகித்துக் கொண்டு வாழும் நிலையில் மக்கள் இல்லை. இவ்வாறான சமூக சீரழிவுகள் மக்களுடைய இயல்பு வாழ்வை பாதித்திருக்கின்றது. போருக்கு பின்னதாகவே எங்களுடைய மாவட்டத்தில், இவ்வாறான சம்பவங்கள் மற்றும் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்திருக்கின்றது.

பாலியல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு வழக்கறிஞர்கள் ஆஜராவதில்லை என ஒரு தீர்மானத்தை எடுத்திருக்கின்றார்கள். அதுபோல் இவ்வாறான கொலை சம்பவங்களில் கைது செய்யப்படுகிறவர்களுக்கும் வழக்கறிஞர்கள் ஆஜராவதை தடுக்கவேண்டும்" என்று கூறினார்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ