Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐ.எஸ். தீவிரவாதிகளை சமாளிப்பது எளிது..! நேருக்கு நேர் போரிட்ட துணிச்சல் மாணவி

 

உலகை அச்சுறுத்தி வரும் ஐ.எஸ் தீவிரவாதிகளை கொல்வது மிகவும் எளிதான காரியம் என அவர்களை நேருக்கு நேர் எதிர்த்து தாக்குதல் நடத்திய கல்லூரி மாணவி ஒருவர் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

டென்மார்க் நாட்டை சேர்ந்த ஜோன்னா பலனி என்ற 23 வயதான இளம்பெண் ஒருவர் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போராட வேண்டும் என்ற நோக்கில் கடந்த 2014 நவம்பர் மாதம் சிரியாவிற்கு சென்றுள்ளார். சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போராடி வரும் குர்து இன போராளிகளுடன் சேர்ந்து ஜோன்னா  போராடி வந்துள்ளார்.

இவருடன் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த நபர் ஒருவரும் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போராடி வந்துள்ளார். போராட்டக்களத்தில் இறங்கியதும் ஒவ்வொரு வீரரும் 24 மணி நேரமும் உஷாராக இருக்க வேண்டும். ஆனால், ஜோன்னாவுடன் சேர்ந்த அந்த ஸ்வீடன் நபருக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருந்ததால், திறந்தவெளியில் நின்று புகைபிடித்துள்ளார். அப்போது, பல மைல்கள் தூரத்திலிருந்து சுடக்கூடிய 'ஸ்னைப்பர்’ துப்பாக்கி மூலம் சிகரெட் புகையை கண்டுபிடித்து அவரை ஐ.எஸ் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்று விட்டனர்.

எனினும், நம்பிக்கையையும் தைரியத்தையும் கைவிடாத ஜோன்னா தொடர்ந்து சிரியாவில் தங்கி போராடி வந்துள்ளார். ஓராண்டிற்கு பிறகு 15 நாட்கள் விடுப்பில் தாய்நாட்டிற்கு திரும்பிய அவரது பாஸ்போர்ட்டை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதால் தற்போது சிரியாவிற்கு திரும்பாமல், அங்குள்ள கல்லூரி ஒன்றில் அரசியல் மற்றும் தத்துவவியல் பட்டம் பயின்று வருகிறார்.

சிரியாவில் தாக்குதல் நடத்தியது குறித்து ஜோன்னா கூறுகையில், "நான் இடம்பெற்றிருந்த குர்து அணியினரின் தலைமையிலான வீரர்கள்தான் மோசூல் நகருக்கு அருகில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருந்த ஒரு கிராமத்தை மீட்டோம். ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு தற்கொலைப்படை தாக்குதல் மட்டும் தான் தெரியும். நேருக்கு நேராக நின்று அவர்களால் போரிட முடியாது. எனவே, ஐ.எஸ் தீவிரவாதிகளை கொல்வது மிகவும் எளிதான காரியம். அதே நேரத்தில், சிரியா அதிபரான ஆசாத்தின் படை வீரர்கள் நன்கு பயிற்சி பெற்றுள்ளதால் அவர்களை வெல்வது கடினம்’ என தெரிவித்துள்ளார்.

உலக நாடுகள் தங்களின் நிலையை உணர வேண்டும் என்ற நோக்கில் சிரியாவில் ஐ.எஸ். ஆதிக்கத்தில் இருக்கும் ரக்கா நகரம் சிதைந்து வருவதை அங்குள்ள பெண்கள் இருவர் படம் பிடித்து வெளி உலகிற்கு காட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ