Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டெல்லியை தாக்க 5 நிமிடம்தான்..! மிரட்டும் பாகிஸ்தான் அணு விஞ்ஞானி

5 நிமிடத்தில் டெல்லியை தாக்கும் வல்லமை, பாகிஸ்தானிடம் உள்ளது என அந்த நாட்டின் அணு விஞ்ஞானி அப்துல் காதிர்கான் மிரட்டல் தொனியில் பேசியுள்ளார்.

பாகிஸ்தான் முதன்முதலாக 1998ம் ஆண்டு, மே மாதம் 28ம் தேதி அணுகுண்டு வெடித்து சோதித்தது. இந்த சோதனையை முன்னின்று நடத்தியவர், அந்த நாட்டின் அணுவிஞ்ஞானி டாக்டர் அப்துல் காதிர்கான். அணுகுண்டு சோதனை நடத்தி 18வது ஆண்டு நிறைவுற்றதை நினைவுகூரும் நாள் நிகழ்ச்சி இஸ்லாமாபாத்தில் நேற்று நடந்தது.

இதில் அணு விஞ்ஞானி டாக்டர் அப்துல் காதிர்கான் கலந்து கொண்டு பேசுகையில், "பாகிஸ்தான் 1984-ம் ஆண்டே அணு வல்லமையை பெற்றிருக்க முடியும். ஆனால் அப்போதைய அதிபர் ஜியா உல் ஹக் அணுகுண்டு வெடித்து சோதிக்க எதிர்ப்பு தெரிவித்தார். அணுகுண்டு வெடித்து சோதித்தால் பாகிஸ்தான் ராணுவத்துக்கு சர்வதேச அளவில் கிடைத்து வரும் நிதி உதவி நின்று விடும் என அவர் நம்பினார். அதனால்தான் அணுகுண்டு சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

ராவல்பிண்டி அருகில் உள்ள காஹூதாவில் இருந்து டெல்லியை 5 நிமிடத்தில் தாக்கும் வல்லமை பாகிஸ்தானிடம் இருக்கிறது. எனது பணிகள் இல்லாமல், பாகிஸ்தான் ஒருபோதும் உலகின் முதல் இஸ்லாமிய அணு ஆயுத நாடாக மாறி இருக்க முடியாது. மிக கடினமான ஒரு சூழ்நிலையில்தான் நாம் அணு ஆயுத நாடாக மாறினோம். பர்வேஸ் முஷாரப் காலத்தில் அணு விஞ்ஞானிகளுக்கு உரிய மதிப்பு கொடுக்கப்படவில்லை. நாட்டின் அணு ஆயுத திட்டத்துக்காக நாங்கள் அரும்பாடு பட்டும் மோசமாக நடத்தப்படுகிறோம்" என்று கூறினார்.

இந்த அப்துல் காதிர்கான், 2004ம் ஆண்டு, முஷாரப் ஆட்சிக்காலத்தில் அணு ஆயுத தொழில்நுட்ப பரவலுக்கு காரணம் என குற்றம் சுமத்தப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். 2009ம் ஆண்டு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம், அவர் ஒரு சுதந்திரமான மனிதர் என அறிவித்தது. அவர் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என அனுமதித்தது குறிப்பிடத்தக்கது.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ