Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழர்களுக்காக புதிய கட்சி... விளக்கும் விக்னேஸ்வரன்!

கொழும்பு: தமிழர்களுக்காக புதிய கட்சி தொடங்கும் திட்டமில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி, புலம்பெயர் அமைப்புக்களின் ஆதரவுடன் புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கப் போவதாக தகவல் வெளியானது.

இதற்கு விளக்கம் அளித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், ''இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தனுடன் நல்லுறவையே நான் பேணுகிறேன். எங்களுக்குள் எந்தவொரு பகையுமில்லை.

அத்தோடு, வடக்கு மாகாண சபையின் அரசியல் தீர்வுத்திட்டம் குறித்த யோசனைக்கு சம்பந்தன் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், தமிழர்களுக்கு ஒரு கௌரவமான அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் சம்பந்தன் உறுதியாக உள்ளார். தற்போதைய சூழ்நிலையில் புதிய கட்சி தேவையில்லை. புதிய கட்சியை ஆரம்பிப்பதால், எந்தவித லாபமும் ஏற்படப் போவதில்லை" என்று கூறி உள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ