Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ராஜபக்சே சகோதரர் பசில் மீண்டும் கைது..! என்ன காரணம்

 

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்சே மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் ராஜபக்சே அதிபராக இருந்தபோது பொருளாதார மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்தவர் பசில் ராஜபக்சே. நாடாளுமன்றத் தேர்தலில் கடந்த ஆண்டு ராஜபக்சே படுதோல்வி அடைந்ததால் அவரது தம்பி பசில் ராஜபக்சே அமெரிக்காவுக்கு தப்பி ஓடினார். ஆனால் அவர் மீது நிதி மோசடி புகார் கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனால் வேறுவழியின்றி அமெரிக்காவில் இருந்து இலங்கை திரும்பிய பசில் ராஜபக்சே கைது செய்யப்பட்டார். சில மாத சிறைவாசத்துக்குப் பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், கம்பஹாவில் உள்ள நில அபகரிப்பு புகாரைத் தொடர்ந்து விசாரணைக்காக அழைக்கப்பட்ட பசில் ராஜபக்சேவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பூகொட நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ