Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்திய இளம்தலைமுறையினர் திறமையை அமெரிக்கா அறியும்! -ஒபாமா புகழ்ச்சி

வாஷிங்டன்: இந்தியா இளம்தலைமுறையினர் கொண்ட நாடு என்பதையும், அந்த இளம்தலைமுறையினர் எத்தகைய திறமையை கொண்டவர்கள் என்பதையும் அமெரிக்கா அறியும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்து உள்ளார்.

ஆப்கானிஸ்தான், கத்தார், ஸ்விட்சர்லாந்து நாடுகளைத் தொடர்ந்து, அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தலைநகர் வாஷிங்டனுக்குச் சென்ற மோடி, வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் அந்நாட்டு அதிபர் ஒபாமாவை சந்தித்துப் பேசினார். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தையில், பொருளாதாரம், பயங்கரவாதம், தூய எரிசக்தி, பருவநிலை மாற்றம், பிராந்தியப் பாதுகாப்பு, இணையவெளி (சைபர்) பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடியும், அதிபர் ஒபாமாவும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமெரிக்க அதிபர் ஒபாமா செய்தியாளர்களிடம் கூறும்போது, ''எனது நண்பர் மோடியை ஓவல் அலுவலகத்தில் மீண்டும் வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். ஆக்கப்பூர்வ அணுசக்தி துறையில் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது, பாதுகாப்பு விவகாரங்கள் உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். இணையவெளி பாதுகாப்புத் துறையில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவது என நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

இந்தியாவின் வளர்ச்சிக்கும், அபிவிருத்திக்கும் அணுசக்தி தொழில்நுட்பம் தேவைப்படுகிறது. ஆகையால், அணுசக்தி விநியோகக் கூட்டமைப்பில் (என்.எஸ்.ஜி.) இந்தியா உறுப்பினராவதை அமெரிக்கா ஆதரிக்கிறது. இந்தியா இளம்தலைமுறையினர் கொண்ட நாடு என்பதையும், அந்த இளம்தலைமுறையினர் எத்தகைய திறமையை கொண்டவர்கள் என்பதையும் அமெரிக்கா அறியும். எனவே எதிர்காலத்திலும் இருநாடுகளும் இணைந்து செயல்படும். இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நெருங்கிய பிணைப்பு உள்ளது" என்றார்.

அதன்பின் பிரதமர் மோடி கூறும்போது, ''இரு நாடுகளின் பொருளாதார உறவுகளை புதிய உச்சத்துக்கு எப்படிக் கொண்டு செல்வது என்பது குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தினோம். பொருளாதார உறவில் புதிய உச்சம்: வணிகம், தொழில்நுட்பம் முதல் நிர்வாகம் வரை பல்வேறு விவகாரங்கள் குறித்தும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

உலகின் மிகப்பெரிய 2 ஜனநாயக நாடுகளாக இந்தியாவும், அமெரிக்காவும் திகழ்கின்றன. இருநாடுகளும், தங்களுக்கு எதிரான சவால்களுக்கு எதிராக மட்டுமன்றி, உலக நாடுகள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களுக்கு எதிராகவும் தோளோடு தோள் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

கடந்த 2 ஆண்டுகளில் இந்தியாவும், அமெரிக்காவும் பருவநிலை மாற்றம், அணுசக்தி பாதுகாப்பு, பயங்கரவாதம் போன்ற சர்வதேச விவகாரங்களில் இணைந்து செயல்பட்டு வருகின்றன. நண்பர்கள் என்ற முறையில் மட்டுமல்லாது, இரு நாடுகளுக்கு இடையேயான இந்த உறவைக் கண்டு நான் பெருமிதம் கொள்கிறேன். எதிர்காலத்திலும் இரு நாடுகளும் தோளோடு தோள் இணைந்து செயல்படும்.

அணுசக்தி விநியோக நாடுகளின் கூட்டமைப்பு (என்எஸ்ஜி), ஏவுகணைகள் தொழில்நுட்ப கட்டுப்பாடு அமைப்பு ஆகியவற்றில் இந்தியா உறுப்பினராவதற்கு அதிபர் ஒபாமா மீண்டும் ஆதரவு தெரிவித்திருப்பதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்ற என்னை அழைத்ததற்கு அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகில் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நாடாக தன்னை இந்தியா பதிவு செய்துள்ளது. இந்தியாவும், அமெரிக்காவும் புதிய துறைகளில் தங்களிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியா இளம்தலைமுறையினரைக் கொண்ட நாடாகும். இந்தியாவில் இருக்கும் மொத்த மக்கள் தொகையில் 80 கோடி பேர் 35 வயதுக்கும் குறைவான வயதினர் ஆவர். புதிய உச்சங்களை அடைவதற்காக அமெரிக்காவுடன் இணைந்து இந்தியாவில் இருக்கும் இளம்தலைமுறையினர் பணியாற்றுவார்கள்." என்றார்.

இந்தியப் பிரதமராக கடந்த 2014 ஆம் ஆண்டில் நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு, வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை அவர் சந்தித்து பேசுவது இது 2-வது முறையாகும். அதேபோல் இது, இரு தலைவர்களுக்கு இடையே நடக்கும் 7-வது சந்திப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ