Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'கார்பன் நெகடிவ்'...கரியமில வாயுவை காணாமல் போகச் செய்த நாடு!​ #WhereIsMyGreenWorld

வ்வொரு நாடும் அதிகளவு கரியமில வாயுவை வெளியிட்டு, சுற்றுச்சூழல் மாசுபடுகிறது எனக் கூறிக் கொண்டு இருக்கையில், ஒரு நாட்டில், கார்பனே இல்லையாம். கார்பனின் அளவு நெகடிவில் போய்க் கொண்டு இருக்கிறது.

இமாலய மலைகளுக்கு நடுவே, சீனா இந்தியா ஆகிய இருபெரும் நாடுகளுக்கு நடுவில், சிறிதாக அமைந்துள்ள பூட்டான்தான் அந்த நாடு. பூட்டான் சர்வதேச அளவில் யாராலும் கண்டுகொள்ளப்படாத நாடு.

சுமார்  7.8 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த நாடு, உலக வரலாற்றின் சுற்றுச்சூழலியலில் ஒரு மைல்கல்லை நட்டுள்ளது. பூட்டானில் வெறும் கரியமில சமநிலை மட்டும் ஏற்படவில்லை, அங்கு கரியமிலம் நெகடிவ்வாக மாறிவிட்டது.

பூட்டானில் வெளியாகும் கரியமில வாயுவின்​ அளவு 1.5 மில்லியன்  டன். ஆனால், அக்காடுகள் சராசரியாக 6 மில்லியன் டன்கள் கரியமில வாயுவினை உறிஞ்சிக் கொள்கின்றன. இதனிடையே, பூட்டான் 2030 க்குள் zero net greenhouse gas emissions மற்றும் zero waste எனும் இரு பெரும் திட்டங்களைக் கொண்டு வர முயற்சிக்கிறது. மேலும், 2020ல் நாட்டில் விளையும் அனைத்துக் காய்கறிகள் மற்றும் பழங்கள் முழுக்க முழுக்க இயற்கை விவசாயம் மூலம் விளைவிக்கப்படும் வகையில், பல திட்டங்களை செயல்படுத்திவருகிறது அந்நாடு. தற்போது, பூட்டானில் 72% காடுகள் என்றாலும் அங்கு மரக்கட்டைகள் ஏற்றுமதி தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கு இன்னொரு காரணமும் உண்டு. பூட்டான்,​ பௌத்த மதத்தை பின்பற்றும் நாடு என்பதால், அங்கு மரங்களை பெரிதும் போற்றும் வழக்கம் உள்ளது. அங்கு எந்த நிகழ்வைக் கொண்டாட வேண்டுமானாலும், மரங்களைத்தான் நடுவார்கள்.​

கடந்த ஜூன் மாதம்,​ 1 மணி நேரத்தில் 49,672 மரங்களை நட்டு உலக சாதனை படைத்தனர். இந்த மாதத் தொடக்கத்தில், மன்னர் கெசாருக்கு (Khesar) குழந்தைப் பிறந்ததைக் கொண்டாட 82,000 வீடுகளில் மரத்தை நட்டனர். மேலும், மற்ற பகுதிகளில் ஏறத்தாழ 26,000 மரங்களை நட்டனர். ஆக மொத்தம் 1,08,000 மரக்கன்றுகள்.

மேலும், பூட்டானிற்கு நிறைய குறிக்கோள்கள் உள்ளன. வழக்கமான மின்சார வழிகளில் இருந்து மாறி, Solar, Wind, Biogas என மாறுதல், நாடு முழுவதும் எலெக்ட்ரிக் கார்களைக் கொண்டு வருவது, அதிலிருந்து வரும் ஆற்றலை மின்சாரமாக மாற்றுவது என அனைத்து திட்டங்களும் இயற்கையை மையப்படுத்தியே அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நம் வாழ்வு என்றும் இயற்கையோடு இணைந்ததாக இருந்தால் நிச்சயமாக நாமும் முன்னேறி,​ நம் நாடும் முன்னேறும் என்பதில் சந்தேகமே இல்லை!

- ந. ஆசிபா பாத்திமா பாவா
(மாணவப் பத்திரிகையாளர்)

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ