Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதச் செயல்களுக்கு இடமளிக்காதீர்கள்! -பாகிஸ்தானை கண்டிக்கும் அமெரிக்கா

வாஷிங்டன்: இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதச் செயல்களுக்கு இடமளிக்காதீர்கள் என்று பாகிஸ்தானை அமெரிக்கா கண்டித்து உள்ளது.

இது தொடர்பாக வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இடையேயான பேச்சுவார்த்தையின்போது விவாதிக்கப்பட்ட விவகாரங்களில், பாகிஸ்தான் விவகாரமும் ஒன்று. இதுதவிர, பல்வேறு விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் அமெரிக்கா வேறுபட்ட உறவை கொண்டுள்ளது. அந்த உறவானது, அந்தந்த நாடுகளின் சூழல்களைச் சார்ந்தது. எனவே, தெற்காசியப் பிராந்தியத்தில் அமெரிக்கா மேற்கொண்டுள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பை ஒருவித விளையாட்டாகவோ அல்லது திட்டமாகவோ கருதக் கூடாது.

தெற்காசியப் பிராந்தியத்தில் இருக்கும் நாடுகள் ஒவ்வொன்றும் பரஸ்பரம் பிற நாடுகளுடன் ஆக்கப்பூர்வமான பாதுகாப்பு ஒத்துழைப்பைப் பேண வேண்டியது முக்கியமாகும். அது பாகிஸ்தானுக்கும் பொருந்தும், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கும் பொருந்தும்.

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு சதித்திட்டம் தீட்டுவதற்கு தங்கள் மண் பயன்படுத்தப்படாமல் இருப்பதை பாகிஸ்தான் உறுதிப்படுத்த வேண்டும். தங்கள் நாட்டில் செயல்படும் அனைத்து பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராகவும் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில், அனைத்து பயங்கரவாத அமைப்புகளும், பாகிஸ்தானையே தற்போது பயன்படுத்தி வருகின்றன என்று நான் நினைக்கிறேன்.

இந்தியாவுடனான உறவு மேம்படுவதற்கு பாகிஸ்தான் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என்று அமெரிக்கா கருதுகிறது. பாகிஸ்தானும், இந்தியாவும் தங்களிடையேயான ஒத்துழைப்பை அதிகரிக்கவும், பதற்றத்தைத் தணிக்கவும் சகஜமான ஒத்துழைப்பு மற்றும் நேரடியான பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்" என்றார்.

பிரதமர் நரேந்திர மோடி, ஆப்கானிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட 5 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின்போது, பாகிஸ்தான் மண்ணில் பயங்கரவாதம் ஊக்குவிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டி இருந்தார். அதையடுத்து, இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதச் செயல்களுக்கு பாகிஸ்தான் மண்ணில் இடமளிக்கக் கூடாது என்று அமெரிக்கா கண்டித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close