Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கச்சேரியில் இளம்பாடகி சுட்டுக்கொலை; ரசிகர்கள் கண்ணெதிரே நிகழ்ந்த சோகம்!

அமெரிக்கா; புளோரிடாவில் நடந்த இசைக் கச்சேரி ஒன்றில் இளம் பாப் பாடகி ஒருவர் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுட்டுக்கொல்லப்பட்ட பாடகியின் பெயர் கிறிஸ்டினா ஜிரிமி. கடந்த 2014-ம் ஆண்டில் நடந்த ‘தி வாய்ஸ்’ இசைப் போட்டி நிகழ்ச்சியில் கிறிஸ்டினா ஜிரிமி 3-ம் இடம் பிடித்தார். அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் இளம் பாப் பாடகிகளில் ஒருவராக உருவெடுத்தார். அமெரிக்க மக்களுக்கு பிடித்த பாடகியாகிப்போன அவரது கச்சேரிகளுக்கு ரசிகர்கள் திரண்டுவருவர். நேற்று முன்தினம் இரவு புளோரிடா நகரில் இசைக் கச்சேரி நடத்தினார்.

கச்சேரியின் முடிவில் வழக்கம்போல் ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்து கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த மர்மநபர் ஒருவர் கிறிஸ்டினாவை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டார். 5 குண்டுகள் பாய்ந்த நிலையில் அவர் மயங்கி சரிந்தார்.

உடனடியாக அவரை அருகிலுள்ள மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் உயிரிழந்தார். தங்களுக்கு பிடித்தமான பாடகி தங்கள் கண்ணெதிரேயே சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து சோகத்தில் ஆழந்தனர்.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close