Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

துப்பாக்கி கலாச்சாரம்..! அமெரிக்காவை கலங்க வைத்த 10 ஆண்டுகள்


அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. வகுப்பறைகளில் மாணவர்கள் நடத்திய கொடூரமான தாக்குதல்கள், பொது இடங்களில் மக்கள் மீது தாக்குதல்கள் மற்றும் விடுதிகளில் தாக்குதல் இப்படி பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்காவில் நடைபெற்ற துப்பாக்கி சூடு விவரங்கள் ஒரு ஃப்ளாஷ்பேக்...

* 2007ம் ஆண்டு வெர்ஜீனிய பல்கலைக்கழக வளாகத்தில் முன்னாள் மாணவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள் உள்ளிட்ட 33 பேர் பலியாயினர்.

* 2007ம் ஆண்டு டிசம்பரில் ஒமாஹா, நெப்ரஸ்கா பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் புகுந்த 19 வயதுடைய ரோபர்ட் கவுகின்ஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஆறு ஊழியர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்ததோடு, துப்பாக்கி சூடு நடத்திய வாலிபரும் உயிரை மாய்த்துக் கொண்டார்.

* 2008ம் ஆண்டு வடக்கு இல்லினோய்ஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள வகுப்பறை ஒன்றில் நுழைந்த ஸ்டீவ் காஸ்மியர்சியக் என்பவர், நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 16 பேர் படுகாயமடைந்தனர். சூப்பாக்கி சூடு நடத்தியவரும் தற்கொலை செய்து கொண்டார்.

* 2009ம் ஆண்டு நியூயார்க் நகரில் அமைந்துள்ள குடியேற்ற மையம் ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். கொலைகாரனிடம் இருந்து தப்ப கழிவறையில் மறைந்திருந்த 37 பேர் பத்திரமாக மீட்டது காவல்துறை.

* 2009ம் ஆண்டு கிலீன்  பகுதியில் ராணுவ உளவியல் மருத்துவர் ஒருவர் திடீரென்று துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டதில் அங்கிருந்த 13 ராணுவத்தினர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

* 2010ம் ஆண்டு அலபாமா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பேராசிரியர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேராசிரியர்கள்  உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.

* 2010ம்  ஆண்டு ஆகஸ்ட்டில் மான்செஸ்டர், கனெக்டிகட் பகுதியில் கிட்டங்கி ஒன்றில் தொழிலாளர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர்.

* 2011ம் ஆண்டு அரிசோனா மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தின் வெளியே நின்று மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 14 பேர் படுகாயமடைந்தனர்.

* 2011ம்  ஆண்டு கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள சலூன் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர்.

* 2012ம் ஆண்டு கலிபோர்னியா மாகாணத்தின் ஆக்லாந்த் பகுதியில் அமைந்துள்ள மதம் தொடர்பான கல்லூரி ஒன்றில், முன்னாள் மாணவர் ஒருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர்.

* 2012ம்  ஆண்டு ஜூலை மாதத்தில் திரையரங்கு ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 12 பேர்  உயிரிழந்தனர். தற்கொலைக்கு முயன்ற கொலைகாரர் தப்பிப்பிழைத்து பின்னர் ஆயுள் தண்டனைக்கு விதிக்கப்பட்டார்.

* 2012ம்  ஆகஸ்ட் மாதத்தில் சீக்கியர் கோயிலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் சரணடைய மறுப்பு தெரிவித்த குற்றவாளியை காவல்துறையினர் துப்பாக்கிச் சுடு நடத்தி தாக்குதலில் இருந்து பொதுமக்களை மீட்டனர்.

* 2012ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மின்னெபொலிஸ் பகுதியில் உள்ள தொழிற்பட்டறையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும் தற்கொலை செய்து கொண்டார்.

* 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் கனெக்டிகட் பகுதியில் உள்ள துவக்கப்பள்ளி ஒன்றில் புகுந்த மர்ம நபர் ஒருவர் கண்மூடித்தனமாக சுட்டதில் அங்குள்ள 20 மாணவர்களும், 6 ஊழியர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். கொலைகாரன் தனது தாயை கொலை செய்துவிட்டு தாமும் தற்கொலை செய்து கொண்டான்.

* 2013ம் ஆண்டு கலிபோர்னியா மாகாணத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டே துப்பாக்கியால் சுட்டதில் 5 பேர் உயிரிழந்தனர். கொலைகாரனை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்.

* 2013ம்  ஆண்டு வாஷிங்டன் நகரில் அமைந்துள்ள கப்பற்படை தளத்தில் முன்னாள் ஊழியர் நடத்திய துப்பாக்கிக் சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர். குற்றவாளியும் தற்கொலை செய்துகொண்டார்.

* 2014ம் ஆண்டு கில்லீன் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர் 16 பேர் காயமடைந்தனர்.

* கலிபோர்னியா பகுதியில் கல்லூரி மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். பின்னர் அவரும் தற்கொலை செய்துகொண்டார்.

* மேரிஸ்வில்லி  பகுதியில் பாடசாலை உணவு விடுதியில் 15 வயது மாணவனால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர்.



* 2015ம் ஆண்டு சார்லஸ்டன்  பகுதியில் உள்ள கோயில் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

* சட்டாங்கோ பகுதியில் உள்ள ராணுவ நிலைகளில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

* ரோஸ்பர்க் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர். குற்றவாளியை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்.

* சான்பெர்னாரிண்டோ பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் சம்பவ இடத்தில் கொல்லப்பட்டனர். 17 பேர் படுகாயமடைந்தனர்.

* ஓர்லாண்டோ நகரில் மதுவிடுதி ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 53 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ