Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

2 சூரியன்களுடன் புதிய கிரகம் கண்டுபிடிப்பு (வீடியோ)

புதிய கிரகங்கள், நட்சத்திரங்கள் மற்றும் பால்வெளி மண்டலத்தை ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின் ‘நாசா’ மையம் ‘கெப்லர்’ விண்கலத்தில் சக்தி வாய்ந்த டெலஸ்கோப்பை பொருத்தி விண்வெளியில் பறக்க விட்டுள்ளது. கெப்லர் விண்வெளி தொலைநோக்கி தொடர்ந்து, சூரிய மண்டலத்திற்கு அப்பாற்பட்ட 1,50,000 நட்சத்திரங்களை கண்காணித்து வருகிறது. தற்போது 2 சூரியன்களுடன் வியாழன் போன்ற புதிய கிரகத்தை கெப்லர் கண்டுபிடித்துள்ளது. அதற்கு கெப்லர் 1647பி என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த புதிய கிரகம் தற்போதுள்ள வியாழன் போன்று உள்ளது. இதன் அருகே 2 நட்சத்திரங்கள் உள்ளன. அவை சூரியன் போன்ற தோற்றத்தில் உள்ளது. அதில் ஒரு சூரியன் பூமியில் இருப்பதைவிட பெரிய அளவிலும், மற்றொன்று சிறியதாகவும் உள்ளது.


 

புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கிரகத்தின் மேற்பரப்பில் திரவ நிலையில் குளம் போன்று தண்ணீர் தேங்கி இருக்கலாம் என கருதப்படுகிறது.  அதே நேரத்தில் இது கியாஸ் நிரம்பிய கிரகம். எனவே இது வாழ தகுதியற்றது என்றும் கூறப்படுகிறது. மேலும் இங்கு பெரிய சந்திரன்கள் இருந்தால் வாழத் தகுதியான கிரகமாக இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close