Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'உங்களால்தான் இந்த நாடு சீரழிந்தது..!' பிரதமரை பின்னி எடுத்த இளம்பெண் (வீடியோ)

 

'உங்களால்தான் இந்த நாடு சீரழிந்தது' என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் முன்னிலையில் இளம்பெண் ஒருவர் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பின நாடாக இங்கிலாந்து நீடிப்பதா அல்லது விலகுவதா என்பது குறித்து விரைவில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இங்கிலாந்து உறுப்பின நாடாக தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதையே பிரதமரான டேவிட் கேமரூன் விரும்புகிறார்.

இந்த நிலையில், ஃபேஸ்புக்கை கலக்கி வரும் இளம் தலைமுறையினருடன் நேரடி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரதமர் கேமரூன், அவர்களின் கருத்தை கேட்டுள்ளார்.

அப்போது, யாஸ்மின் என்ற இளம்பெண், பிரதமருக்கு நேருக்கு நேராக பேசியுள்ளார். "ஐரோப்பிய ஒன்றியத்தில் இங்கிலாந்து இருப்பதைதான் நான் விரும்புகிறேன். இதற்காக நான் உங்கள் கட்சிக்கு ஆதரவு அளிக்கிறேன் என கூற முடியாது. உண்மையில் உங்கள் கன்சர்வேட்டிவ் கட்சியை நான் மிகவும் வெறுக்கிறேன். நீங்களும், உங்கள் கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகளும் இந்த நாட்டை சீரழித்து விட்டீர்கள்.

இந்த நாட்டின் மாணவர்களின் எதிர்காலத்தை இருண்டதாக மாற்றி விட்டீர்கள். உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் சமுதாயத்தில் உள்ள நலிவடைந்தவர்கள் உங்களால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்" என வெளிப்படையாக பேசியுள்ளார்.

இளம்பெண் இவ்வாறு பேசியபோது அவரது அருகில் அமர்ந்திருந்தவர்கள் முகம் சுழித்துள்ளனர். ஆனால், தன்னுடைய முகத்தில் புன்னகை மாறாத பிரதமர் கேமரூன் அவரது பேச்சை அமைதியாக கேட்டார்.

இளம்பெண் பேச்சை முடித்த பின்னர், ‘என்னைப் பற்றியும் எனது கட்சியை பற்றியும் எதிராக பேசியிருந்தாலும், அதனை வெளிப்படையாக பேசிய இளம்பெண்ணை அனைவரும் பாராட்டுவோம்’ என பிரதமர் கேமரூன் கூட்டத்தினரை பார்த்து உற்சாகமாக பேசியது அங்குள்ளவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ