Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'என்னை தவிக்கவிட்டு சென்றுவிட்டாள்..!' ட்விட்டரில் கலங்கிய பெண் எம்பி கணவர்


ங்கிலாந்தில் தொழிலாளர் கட்சி எம்பியான ஜோ காக்ஸூன் உயிரிழப்பை தாங்கிக் கொள்ள முடியாத கணவர், தனது ட்விட்டர் பக்கத்தில் மனக்கவலையைத் தெரிவித்துள்ளார்.

பிரிஸ்டால் நகரில் அமைந்துள்ள தனது அலுவலகத்திற்கு தொழிலாளர் கட்சி எம்பியான ஜோ காக்ஸூன் எம்பி சென்றுகொண்டிருந்தபோது, மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவரது கணவர் மனதுருகி ட்விட்டர் பதிவினை வெளியிட்டுள்ளார்.

அதில், "எனது இரு குழந்தைகள் மற்றும் என்னையும் தவிக்கவிட்டு சென்றுவிட்டார். அதிக சிரமங்கள், அதிக வலிகள், குறைந்த சந்தோஷங்களுடன் கூடிய சோகமான புது வாழ்க்கை எங்களுக்கு ஆரம்பித்துவிட்டது. நான் வாழும் ஒவ்வொரு நொடிகளையும் அவளுக்காக சமர்ப்பிக்கிறேன். எனது மனைவி, தனது வாழ்வின் ஒவ்வொரு நாளையும் மனத்துயரங்கள் ஏதுமின்றி சந்தோஷமாக வாழ்ந்து வந்தாள்.

மேலும் கடந்த 3 மாதங்களாக அவள் தொடர்பாக வெளியான தவறான செய்திகளின் காரணமாக தொந்தரவுகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்" என கூறியுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ