Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அரசு பணத்தை கையாடல் செய்த அதிபர்: கணக்குப் பார்த்து திரும்பத்தரச் சொன்ன கறார் நீதிமன்றம்

தென்னாப்பிரிக்க அதிபராக பதவி வகிப்பவர் ஜேக்கப் ஸூமா. இவர் தனது வீட்டை பிரமாண்டமாக அலங்கரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதற்காக அவர் சுமார் அரை மில்லியன் அமெரிக்க டாலரை அரசு பொது நிதியிலிருந்து எடுத்து செலவிட்டதாக கூறப்படுகிறது. இது எதிர்கட்சிகளால் புகாராக சொல்லப்பட  இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு போனது.

அரசு பணத்தை கையாடல் செய்ததன்மூலம் அவர் தனது அரசியல் சாசனத்தை மீறி செயல்பட்டுள்ளார் என நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. விசாரணையில் அவர் கையாடல் செய்தது உறுதியானதையடுத்து, அதிபர் ஜேக்கப் ஸூமா தனது இல்லத்தை அலங்கரிப்பதற்காக அரசு பணத்தில் செலவிட்ட அரை மில்லியனுக்கு மேலான அமெரிக்க டாலரை அரசுக்கு திரும்பச் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

அத்துடன் அதிபர் ஜேக்கப் ஸூமா திரும்பச் செலுத்தவேண்டிய தொகை எவ்வளவு என்று துல்லியமாக கணக்கிடுமாறு கருவூலத் துறைக்கும் அந்நாட்டு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே இந்த ஊழலுக்கு அதிபர் ஸூமா பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. பணியின்போது தான் நேர்மையற்ற முறையில்  நடக்கவில்லை என்று இதற்கு ஸூமா பதிலளித்துள்ளார்.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ