Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சோமாலியாவில் குண்டு வெடிப்பு... பஸ் பயணிகள் 20 பேர் பரிதாப பலி!

 

மொகாதிசு: சோமாலியா தலைநகர் மொகாதிசுவின் தென்மேற்கு பகுதியில் பயங்கரவாதிகள் சாலைக்கு அடியில் வெடிகுண்டை புதைத்து வைத்து ரிமோட் மூலம் வெடிக்க செய்துள்ளனர். இந்த கோர சம்பவத்தில் பஸ்சில் பயணம் செய்த 20 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அல்-கொய்தா இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புடைய அல் ஷபாப் அமைப்பினர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்கள் ராணுவவீரர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அப்பாவி மக்களைக் குறிவைத்து பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தலைநகர் மொகாதிசுவின் தென்மேற்கு பகுதியில் உள்ள லாபுலே என்ற நகரில் பயங்கரவாதிகள் சாலைக்கு அடியில் வெடிகுண்டை புதைத்து வைத்திருந்து இருக்கின்றனர். அந்த சாலையில் மினி பஸ் ஒன்று வந்தபோது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் `ரிமோட்' மூலம் சாலைக்கு அடியில் பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்க செய்திருக்கின்றனர்.

உடனே அந்த குண்டு, பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி இருக்கிறது. இந்தக் குண்டு வெடிப்பில் சிக்கிய அந்த பஸ் தூக்கி வீசப்பட்டு தீப்பிடித்து கருகி முற்றிலும் உருக்குலைந்திருக்கிறது. இந்தக் கோர சம்பவத்தில், பஸ்சில் பயணம் செய்த 20 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close