Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழர்களின் அனைத்து நிலங்களும் 2018க்குள் ஒப்படைக்கப்படும்!- இலங்கை உறுதி

ஜெனிவா: ராணுவத்தின் வசம் உள்ள தமிழர்களின் நிலங்கள் 2018-ம் ஆண்டுக்குள் திரும்ப ஒப்படைக்கப்படும் என இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஜெனிவாவில் நடைபெற்ற சர்வதேச மனித உரிமை ஆணையத்தின் 32வது கூட்டத்தில் பேசுகையில், ''ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தீர்மானத்தை நிறைவேற்றுவதில் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவும், பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவும் உறுதியாக இருக்கின்றனர். இருப்பினும், இதில் வெளிநாட்டினரின் பங்களிப்பை ஏற்கமாட்டோம் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில், ராணுவத்தின் வசம் இருந்த 701 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டது. அதில், 201.3 ஏக்கர் நிலம், அதன் உரிமையாளர்களிடம் கடந்த 25-ம் தேதி திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்னும் ராணுவத்தின் வசம் உள்ள நிலங்கள் யாவும் 2018-ம் ஆண்டுக்குள் தமிழர்களிடம் ஒப்படைக்கப்படும்.

இதை ஒரே நாளில் செய்து விட முடியாது. இந்த நடவடிக்கைகள் யாவும் நியாயமான, நேர்மையான முறையில் நடக்கும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை அரசின் நிர்வாகங்கள் தாமதப்படுத்துவதாக கூறுவது தவறு. அவர்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன'' என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ