Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டைட்டானிக் நாயகனுக்கு வந்த 'திடீர்' சோதனை! -இஸ்லாமிய எதிர்ப்பை வெல்வாரா டி காப்ரியோ?

புகழ்பெற்ற இஸ்லாமியக் கவிஞர் ரூமி வேடத்தில், ஹாலிவுட் நடிகர் லியனார்டோ டி காப்ரியோ நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியது. டி காப்ரியோவுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி, அதிர வைத்திருக்கிறார் வாலரி ஜோனோவிக் என்பவர்.

தஜிகிஸ்தானின் வாக்ஸ் கிராமத்தில் 1207-ம் ஆண்டு பிறந்தவர் ஜலாலுதீன் ரூமி. பாரசீக மொழியில் இவர் எழுதிய மஸ்னவி, பறவைகளின் மாநாடு உள்ளிட்ட ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள் மிகப் புகழ்பெற்றவை. 'பாரசீக ஷேக்ஸ்பியர்' என்றே ரூமி அழைக்கப்படுகிறார். ரூமியின் வழியைப் பின்பற்றி நடப்பவர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். தற்போது ரூமியின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க முயற்சி செய்து வருகின்றனர் ஹாலிவுட் திரைக்கதை எழுத்தாளர்கள் டேவிட் பிரான்ஜோனி மற்றும் ஸ்டீபன் ஜோயல் ஆகியோர்.  இந்தக் கதையில் ரூமி வேடத்தில் நடிக்க. 'தி ரெவனண்ட்' படத்திற்காக ஆஸ்கர் விருதை வென்ற லியனார்டோ டி காப்ரியோவைத் தேர்வு செய்துள்ளனர்.

மேலும், இந்தப் படத்தில் அயர்ன் மேன் படத்தில் நடித்த டவ்னி ஜுனியர், முதன்மையான பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். ' இஸ்லாமியரைத் தவிர, வெள்ளைக்காரர் ஒருவர் இந்தப் படத்தில் நடிப்பதன் மூலம், இஸ்லாமிய மக்களுக்குச் சென்று சேரக் கூடிய அனைத்து நன்மைகளையும் அவரே பெறுகிறார். இதை நாம் அனுமதிக்கக் கூடாது. மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த ஒருவரே ரூமி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும்' என்ற கோரிக்கையை முன்வைத்து, கேர் 2 பெட்டிசன்ஸ் என்ற தளத்தின் மூலம் ஆதரவு திரட்டி வருகிறார் ஜோனோவிக். இதுவரையில், 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள், டி காப்ரியோவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

' ரூமி பாத்திரத்தில் டி காப்ரியோ நடிப்பது சரியானதா?' என்ற கேள்வியை, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலச் செயலாளர் ஹாஜாகனியிடம் கேட்டோம்.

" ரூமியின் கதாபாத்திரத்தில் வெள்ளைக்காரர் ஒருவர் நடிப்பதை எதிர்ப்பதில் நியாயம் இருப்பது போலத் தெரியவில்லை. மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கியபோது, அந்தப் பாத்திரத்தில் சிறந்த முறையில் நடித்தவர் ஒரு வெள்ளைக்காரர்தான். நூறு கோடி பேர் இருக்கும் இந்தியாவில், காந்தியின் கதாபாத்திரத்தில் நடிக்க ஒருவருமே கிடைக்கவில்லையா என்ற கேள்வி எழவில்லை. அதேபோல், 1976 ம் ஆண்டு தி மேசேஜ் என்ற படத்தில், நபிகள் நாயகம் பற்றிய சித்தரிப்பில், சைகை மூலம் அவருடைய பாத்திரத்தை மிகச் சிறப்பாக நடித்திருந்தார் ஹம்ஜா என்பவர். இவர் இஸ்லாமியர் அல்ல. அவரைவிட சிறப்பாக வேறு யாரும் அந்தப் பாத்திரத்தில் நடித்திருக்க முடியாது என்பதே பேச்சாக இருந்தது.

அதேபோல், உமர்முக்தார் படம் வந்த பிறகுதான், லிபிய போராட்டமே வெளியுலகிற்கு தெரிய வந்தது. இந்தப் படத்தை இத்தாலி தடை செய்திருந்தது. ஒருமுறை லிபிய அதிபர் கடாபி, இத்தாலி சென்றிருந்தபோது, நல்லெண்ண அடிப்படையில் உமர் முக்தார் படத்திற்கான தடையை நீக்கியது இத்தாலி. இதில் உமர் முக்தார் கதாபாத்திரத்தில் நடித்தவர் ஒரு கிறிஸ்தவர். கலைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு மதச்சாயம் பூசக் கூடாது. அதிலும், மிகச் சிறந்த கவிஞரான ரூமியின் கதைக்குள் சர்ச்சை எழுவதை தவிர்க்க வேண்டும். கம்பராமாயணத்தைவிட ஆறு மடங்கு பெரியது ரூமி எழுதிய மஸ்னவி. மஸ்னவிக்கு மயங்காதவர்கள் மிகக் குறைவே. அவருடைய பறவைகளின் மாநாடு கவிதை, மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. மதங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு மாபெரும் கவிஞனை, மதச்சாயத்திற்குள் அடக்குவது சரியானதல்ல" என்றார் நிதானமாக.

'நாய்கள் குரைத்தால் நிலவுக்கென்ன? நாய் அதன் வேலையைச் செய்கிறது. நிலவும் தனது அழகிய முகத்திலிருந்து ஒளி வீசிக்கொண்டுதான் இருக்கும். நாணல் நுழைகிறது என்பதற்காக ஓடும் நீர் அசுத்தம் அடைவதில்லை'. 

எதிர்ப்பாளர்கள் ரூமியின் இந்த புகழ்பெற்ற வரிகளை படிக்காமலா இருப்பார்கள்...?ஆ.விஜயானந்த்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

நன்றி மறக்காத ஜெயலலிதா...! - மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 8
placeholder

சசிகலா. ரத்த உறவு ஏதும் இல்லை; மைசூருவில் உடன் விளையாடியவரும் இல்லை; சர்ச் பார்க்கில் உடன் படித்தவரும் இல்லை; சாதாரணமாக திரைப்பட கேசட் வாடகைக்கு விட்டுக்கொண்டிருந்தவர்... அவ்வளவுதான்..! அவர் எப்படி இந்த அளவுக்கு ஜெயலலிதாவுக்கு நெருக்கமானார்... அவர் எப்படி தமிழ்நாட்டின் ஓர் அதிகார மையம் ஆனார்... அவரின் ஆசி கிடைத்துவிட்டால்போதும், எந்த உச்சத்தையும் தொடலாம் என்ற அளவுக்கு அவர் எப்படி உயர்ந்தார்...? அவர் குடும்பத்தால் தனக்குக் கெட்ட பெயர் என்று தெரிந்தபின்னும், அவரை முற்றும் முழுவதுமாக ஜெயலலிதா கைவிட மறுப்பதன் காரணம் என்ன...? சோ முதல் சுப்பிரமணிய சுவாமி வரை, எவ்வளவோ முயற்சித்துவிட்டார்கள். ஆனாலும், அவர்கள் நட்பைப் பிரிக்க முடியவில்லை என்ன காரணம்...? இதற்கான விடையைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், ஜெயலலிதாவைப் புரிந்துகொள்ள வேண்டும். அவரைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், அவர் பள்ளிக் காலத்தில் நடந்த சம்பவத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

MUST READ