Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பங்காளதேஷ்: ஓட்டலில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 20 பேர் பலி!

 

டாக்கா: பங்காளதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள பேக்கரி ஒன்றில் புகுந்து, ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 வெளிநாட்டினர் பலியானதாக தெரியவந்துள்ளது.

வங்காளதேசம் நாட்டின் தலைநகரான டாக்காவில் உள்ள ஓட்டலுக்குள் புகுந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு 20 வெளிநாட்டினர் பலியானதாக தெரியவந்துள்ளது.

டாக்காவில் உள்ள ஹோலி ஆர்ட்டிஷன் என்ற பேக்கரிக்குள் புகுந்த ஐ.எஸ். தீவிரவாதிகளால், பணயக் கைதிகளாக பிடிபட்டிருந்த 18 பேர், கமாண்டோ படையினர் நடத்திய அதிரடி தாக்குதலின் மூலம் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்த மீட்பு நடவடிக்கையில் ஆறு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

முன்னதாக, இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த இருவர் கொல்லப்பட்டதாக இன்று காலை செய்திகள் வெளியாகின. இந்நிலையில், ஓட்டலில் பணயக் கைதிகளாக பிடிபட்டிருந்த 20 வெளிநாட்டினர் பலியானதாகவும், அவர்கள் அனைவரும் இத்தாலி மற்றும் ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என்றும் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

 

எடிட்டர் சாய்ஸ்