Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வந்துவிட்டது ஹிலாரி மோஜி!

பிரபலங்களின் புகழை இன்றைய தொழில் நுட்பம் நன்கு பயன்படுத்திக் கொள்கிறது. இதற்கு ஓர் சிறந்த உதாரணம் இமோஜிக்கள் எனப்படும் செய்கையை உணர்த்தும் கார்ட்டூன்கள்.  கோபம், அழுகை, மகிழ்ச்சி, சோர்வு, ஆச்சர்யம், படபடப்பு, காதல், அன்பு போன்ற நமது வாழ்வின் வெவ்வேறு தருணங்களில் நிகழும் அன்றாட சுபாவங்களை வார்த்தைகள் அல்லாமல் வெளிக்கொணர சிறந்த பதிவாக உள்ளது இந்த இமோஜிக்கள்.

இதன்மூலம் சாட்டிங் மிகவும் எளிதாகிறது. நான்கு வார்த்தைகள் டைப் செய்ய வேண்டிய இடத்தில் ஒரு இமோஜி பயன்படுத்தினாலே போதும் என்கிற நிலை தற்போது இளசுகளிடம் உருவாகியுள்ளது. சமீப காலங்களில் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிகம் பேரால் இவை பயன்படுத்தப்படுகின்றன.

இவற்றைப் புரிந்து கொண்ட இந்நிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளர்களைக் கவர விதவிதமான இமோஜிக்களை தங்கள் ஸ்மார்ட் போன் அப்ளிகேஷன்களில் அறிமுகப்படுத்தத் தொடங்கினர். இமோஜிக்களுக்கென்றே பிரத்யேகமாக தனி ஆப்பிள் ஆண்டிராய் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்கள் வந்து விட்ட நிலையில், பிரபலங்களான கிம் காடிஷியான், பாஸ்கெட் பால் சாம்பியன் ஸ்டெப் கரி ஆகியோரது இமோஜிக்கல் ஸ்மார்ட் போன் உபயோகிப்பவர்களை அதிகம் கவர்ந்தது. இதன் விளைவாக பல நிறுவனங்கள் உலகின் பல்வேறு பிரபலங்களின் இமோஜிக்களை உருவாக்கத் தொடங்கியுள்ளனர்.
 
இதன் தொடர்ச்சியாக, ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களான இன்றைய தலைமுறைக்கு அறிமுகமாகிறார் அமெரிக்க ஜனநாயக கட்சித் தலைவரும், பிரதமர் வேட்பாளருமாகிய ஹிலாரி கிளின்டன். அவரது இமோஜி வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வலம் வரத் தொடங்கியுள்ளது. இவற்றை ஆப்பிள் ஸ்டோரில் இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

'தனுங்கி சூட்' என்னும் நிறுவனம் உருவாக்கியிருக்கும் இந்த இமோஜிக்கள் வாடிக்கையாளர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. வாரத்திற்கு ஒருமுறை அப்டேட்டுகளை அளிக்கிறது இந்த ஆப். இந்த இமோஜிகளுக்கு ஹிலாரி மோஜி எனப் பெயரிட்டுள்ளனர். ஹிலாரி இமோஜியைப் பயன்படுத்துவதன் மூலம், வாடிக்கையாளர்கள் வரவிருக்கும் அமெரிக்கத் தேர்தலில் ஹிலாரி வெற்றி பெற ஆதரிக்கின்றனர் என்று பொருள். இதனை வைத்து உலகளவில் உள்ள ஹிலாரி ஆதரவாளர்களை கணக்கிட முடியும்.

இன்றைய காலத்தில் பிரபலங்கள் மட்டுமல்லாமல் நாம் ஒவ்வொருவரும் நம்முடைய கேலி சித்திரங்களைக் காண விரும்புகிறோம். அதனாலேயே நமது இமோஜிக்களை உருவாக்க, பல போட்டோ ஃபில்டர்கள் அடங்கிய போட்டோ எடிட்டிங் சாப்டவேர்கள் ஸ்மார்ட்போன்களில் உலா வரத் தொடங்கியுள்ளன.

எதிர்காலத்தில் இதே நிறுவனங்கள், மக்களைக் கவர ஒவ்வொருவருக்கும் பிரத்யேகமான இமோஜிக்களை உருவாக்கி, அதனை வர்த்தகமாக்கும் காலம் வரலாம்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ