Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஈராக் குண்டு வெடிப்பில் 75 பேர் உயிரிழப்பு! ஐ.எஸ். தீவிரவாதிகள் அட்டூழியம்

பாக்தாத்: ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 75 பேர் பலியாகியுள்ளனர்.

ஈராக்கிலுள்ள பாக்தாத்தில் அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டுகள் வெடித்தது. இதில், அங்கு இருந்த 75 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 130 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

75 பேரை பலிகொண்ட குண்டு வெடிப்பு சம்பவம், தற்கொலைப் படை மூலம் நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் ஐ.எஸ். தீவிரவாதிகள் பெற்றுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

முதல் வெடிகுண்டு, பிரபலமான ஓட்டல் அருகே தற்கொலைப் படை கார் மூலம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இதில், இஸ்லாமிகள் தங்கள் நோன்பை முடித்து, உணவு சாப்பிட்ட வந்தவர்களில் பெரும்பாலானோர் உயிரிழந்துள்ளனர்.

இரண்டாவது வெடிகுண்டு, எப்போதும் பரபரப்பாக இருக்கும் வர்த்தகப் பகுதியில் நடத்தப்பட்டிருக்கிறது.

இதேபோல், நேற்று பங்காளதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள பேக்கரி ஒன்றில் புகுந்து, ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 வெளிநாட்டினர் பலியாகினர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ