Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கறுப்பின மனிதர் மீது துப்பாக்கி சூடு :இறக்கும் தருவாயை வீடியோவாக வெளியிட்ட தோழி!

மெரிக்காவில் போலீசால் சுடப்பட்ட கறுப்பினத்தவரின் உயிர் பிரியும் நேரத்தில் அவரை வீடியோ எடுத்து, அவரின் தோழி அதனை  ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளகிய மனம் படைத்தவர்கள் இந்த வீடியோவை பார்ப்பதை தவிர்க்கவும்...



                            

அமெரிக்காவின் மின்னபொலைஸ் நகரில், சாலையில் வேகமாக வந்த காரை போலீசார் நிறுத்தி  காரில் இருந்தவரை லைசென்சை காட்டுமாறு கூறியுள்ளனர்.  காரில் இருந்த கறுப்பின மனிதர்  லைசென்சை காட்டாமல், துப்பாக்கியை எடுத்தாகத் தெரிகிறது

இதையடுத்து  போலீசார் அவரை நோக்கி சூப்பாக்கியால் சுட்டனர்.  இதில் பிலாண்டோ கேசில் என்ற அந்த கறுப்பின மனிதர்  பலியானார். துப்பாக்கி சூடு நடந்த போது, பிலாண்டோ கேசிலுடன் அவரின் தோழியும் காரில் இருந்துள்ளார்.   மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவரின் தோழி, பிலாண்டோ கேசிலின் உயிர் பிரியும் நேரத்தில்  வீடியோ எடுத்து அதனை ஃபேஸ்புக்கில் வெளியீட்டுள்ளார்.  சுமார் 10 நிமிடம் இந்த வீடியோ ஓடுகிறது.

அமெரிக்காவில் தொடர்ந்து கறுப்பின மக்களை போலீசார் துன்புறுத்தி வருவதாக ஏற்கெனவே குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இந்த வீடியோவும் அங்கு பெரிய அதிர்வலையை   ஏற்படுத்தியுள்ளது இதற்கிடையே போலீஸ்  வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் போலீஸ் அதிகாரி ஒருவர் சூப்பாக்கி சூட்டில் ஈடுபட்டதாக மட்டும் கூறியுள்ளது.




 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ