Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரூ.1,225 கோடி முறைகேடு புகார்...' நான் ஏமாற்றவில்லை' - மறுக்கும் மல்லையா!

லண்டன்: யுனைட்டெட் புரூவரிஸ் நிறுவனத்தின் ரூ.1,22‌5 கோடியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக அந்நிறுவனம் எழுப்பியுள்ள குற்றச்சாட்டை, லண்டனில் தஞ்சம் அடைந்துள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா மறுத்துள்ளார்.

வங்கி கடன் மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கி உள்ள தொழில் அதிபர் விஜய் மல்லையா, அதன் காரணமாக லண்டனுக்கு தப்பிச் சென்றுள்ளார். மேலும், விஜய் மல்லையாவை அறிவிக்கப்பட்ட (தேடப்படும்) குற்றவாளியாக மும்பையிலுள்ள சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச்சட்ட சிறப்பு நீதிமன்றம் அறிவித்து உள்ளது.

இந்நிலையில், 1,225 கோடி ரூபாயை விஜய் மல்லையா, தன் நிறுவனங்களுக்கு மாற்றிக் கொண்டதாக யுனைடெட் புரூவரிஸ் நிறுவனம் குற்றஞ்சாட்டி உள்ளது.

இது குறித்து விஜய் மல்லையா, இ-மெயில் மூலம் அளித்துள்ள பதிலில் ''நான் யாரையும் ஏமாற்றவில்லை. யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தில் இருந்த, என்னுடைய, யு.பி., குழுமத்தின் பங்குகளை, டியாஜியோ நிறுவனத்துக்கு 2013ல் மாற்றினேன். அப்போது ஏன் இதை அவர்கள் கூறவில்லை, இது பொய் புகார். யுனைட்டெட் புரூவரிஸ் நிறுவனத்தின் விற்பனை முற்றிலும் சட்டரீதியாகவே நடந்துள்ளது" என்று மறுப்பு தெரிவித்து உள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close