Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிதி முறைகேட்டில் ராஜபக்சே மகன் நமல் திடீர் கைது

நிதி முறைகேடு புகார் தொடர்பாக இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான  நமல் ராஜபக்சே, நிதி நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான பணத்தை முறைகேடாக செலவு செய்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக விசாரணைக்கு நிதி குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் முன்னிலையில் நமல் ராஜபக்சே இன்று ஆஜரானார். அவரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், பின்னர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நமல் ராஜபக்சேவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இன்று மாலை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

எடிட்டர் சாய்ஸ்