Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நெருப்புடா..! அமெரிக்காவை மிரள வைக்கும் வடகொரியா


தென் கொரியாவில் அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு தளவாடங்களை அமெரிக்கா நிறுவினால் தென் கொரிய பிராந்தியத்தை நெருப்புக் கடலாய் மாற்றுவோம் என்று வடகொரியா கடுமையாக எச்சரித்துள்ளது.

வட கொரியா அணு மற்றும் ஏவுகணை சக்தியை அதிகரிக்கும் வகையில் தீவிர சோதனைகளை நடத்தி வருகிறது. இதனால் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள அண்டை நாடான தென் கொரியா, அமெரிக்காவின் உதவியை நாடியுள்ளது. இதையடுத்து தென் கொரியாவில் ' THAAD' எனப்படும், அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு தளவாடங்களை தென் கொரியாவில் நிறுவ அமெரிக்கா முன்வந்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எச்சரிக்கை விடுத்துள்ள வடகொரியா, உலகளவில் ஆதிக்கத்தை நிலைநாட்டும் வகையில் THAAD ஏவுகணை எதிர்ப்பு தளவாடங்களை தென் கொரியாவில் நிறுவ அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. 'THAAD' நிறுவப்படும்  இடம்,நேரம் ஆகியவை உறுதி செய்யப்பட்டால், கடுமையான தாக்குதல் நடத்தப்படும். எனவே இத்திட்டத்தை அமெரிக்க கைவிடவேண்டும். இதனையும் மீறி மேற்கொண்டால், தென் கொரிய பிராந்தியத்தை நெருப்புக் கடலாய் மாற்றுவோம்.

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக கூறி, அமெரிக்க அமைச்சரவை அவரை கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது. இச்செயல், போர் பிரகடனம் போன்றது. இதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என்றும் எச்சரித்துள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close