Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிக்க 250 தமிழக மீனவர்களுக்கு அனுமதி! - இலங்கை அரசு முடிவு

கொழும்பு: இலங்கையில் ஆழ்கடலில் மீன்பிடிக்க 250 தமிழக மீனவர்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து இலங்கை அரசு முடிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது. தற்போதைய நிலையில், இலங்கை சிறைகளில், 67 தமிழக மீனவர்களும், அவர்களின் 98 படகுகளும் உள்ளதாக கூறப்படுகிறது. இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார்.

மேலும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் மற்றும் அவர்களுடைய படகுகளையும் விடுவிக்குமாறு இலங்கை அரசுக்கு, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாவும் கடிதம் எழுதினார். ஆனால், இந்த கோரிக்கையை ஏற்க இலங்கை அரசு மறுத்து வருகிறது.

இதற்கிடையே இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் பொருட்டு, இந்திய மீனவர்கள் சிலருக்கு இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிப்பதற்கு லைசென்சு வழங்கும் முறையை அந்த நாட்டு அரசு பரிசீலித்து வருவதாக செய்தி வெளியாகியது. இப்பிரச்சினையில் புதிய திருப்பமாக, குறிப்பிட்ட நாட்களில், இலங்கையில் ஆழ்கடலில் மீன் பிடிக்க 250 தமிழக மீனவர்களுக்கு அனுமதி அளிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இதனை இலங்கை அரசு வட்டார தகவல்கள் தெரிவித்து உள்ளன.

ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு முழுமையாக தடை விதிக்கக்கோரும் மசோதாவை கடந்த பிப்ரவரி மாதம் இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி. சுமந்திரன் கொண்டு வந்தார். அந்த மசோதா நிறைவேறிவிட்ட போதிலும், இன்னும் அமலுக்கு வரவில்லை. எனவே, தடை அமலுக்கு வராத நிலையில், தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு அனுமதி அளிக்க உள்ளது.

இலங்கை அரசின் இந்த முடிவை தமிழக மீனவ அமைப்பை சேர்ந்தவர்கள் வரவேற்று இருந்தாலும், 6 கடலோர மாவட்டங்களுக்கும் சேர்த்து, 250 மீனவர்களுக்கு மட்டும் அனுமதி அளிப்பது என்பது மிகவும் குறைவானது. இன்னும் அதிகமான மீனவர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close