Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உலகளவில் அதிகம் சம்பாதிக்கும் 100 பிரபலங்களின் பட்டியல்; ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டது

அமெரிக்கா:  2016-ஆம் ஆண்டில் உலகின் அதிகம் சம்பாதிக்கும் 100 பிரபலங்களின் பட்டியலை அமெரிக்காவின் பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் பிரபல பத்திரிகை, ஃபோர்ப்ஸ் இதழ். இது ஆண்டுதோறும் உலக பிரபலங்களின் பல்வேறுவிதமான தரவரிசை பட்டியல்களை வெளியிட்டுவருகிறது. இது தற்போது 2016-ஆம் ஆண்டின் உலக அளவில் அதிகம் சம்பாதிக்கும் 100 பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

கடந்த ஜூன் முதல் இந்த ஜூன் வரை எடுக்கப்பட்ட இந்த கணக்கெடுப்பில் இந்திய பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆண்டிற்கு ரூ.221 கோடி வருமானம் ஈட்டி ஷாருக்கான் 86-வது இடத்தையும், ரூ.211 கோடி வருமானத்துடன் அக்ஷய் குமார் 94-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

அமெரிக்க பாடகர் டெய்லர் ஸ்விஃப்ட், கடந்த வருடத்தில் ரூ.1141 கோடி வருமானம் ஈட்டி முதல் இடம் பெற்றுள்ளார். நடிகர் ஜாக்கிசான் ரூ.409 கோடி வருமானம் ஈட்டி 23-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

பிரபலங்களின் பெயர் பட்டியலில் பிரபல விளையாட்டு வீரர் லியோனல் மெஸ்ஸி 8 வது இடத்தையும், பிரபல பாப் இசைப்பாடகி மடோனா 12 வது இடத்தையும், உலகின் பிரபல ஸ்டண்ட் நடிகர் ஜாக்கி சான் 23 வது இடத்தையும் பெற்றிருக்கின்றனர். ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் 37 வது இடம்பெற்றுள்ளார். நடிகர் ஜானி டெப் 46 வது இடமும் ஹாலிவுட் பாடகி ஜெனிபர் லோபஸ் 68 வது இடமும் பெற்றுள்ளனர்.

பிரபல ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் 91 வது இடத்தையும், பிரபல பாடகி பிரட்னி ஸ்பியர்ஸ் 99 வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

ஃபோர்ப்ஸ் வெளியிட்ட இந்தப் பட்டியலில் இசைக்கலைஞர்களே பெரிதும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ