Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'மனதை தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்...!'- டிரம்ப்புக்கு கிரீன் டீ அனுப்பிய கொல்கத்தா நிறுவனம்!

நியூயார்க்: உடலையும், மனதையும் தூய்மைப்படுத்துவதற்காக டொனால்ட் டிரம்ப்புக்கு, கொல்கத்தா தேயிலை தயாரிப்பு நிறுவனம் ஒன்று கிரீன் டீ அனுப்பியுள்ளது.

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில் பிரபல ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவது உறுதியாகி விட்டது.

டொனால்ட் டிரம்ப் தேர்தல் பிரசாரத்தின்போது, மக்களிடம் வெறுப்பை தூண்டும் விதமாக பேசி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இந்நிலையில், டிரம்ப்புக்கு கொல்கத்தா தேயிலை நிறுவனம் ஒன்று இலவசமாக கிரீன் டீ பாக்கெட்டுகளை அனுப்பியுள்ளது. சுமார் 4 ஆண்டுகளுக்கு போதுமான கிரீன் டீ பாக்கெட்டுகளை, நியூயார்க்கில் உள்ள டிரம்ப்பின் அலுவலகத்தில் தேயிலை நிறுவன ஊழியர்கள் சில நாட்களுக்கு முன் சேர்த்துள்ளனர்.

அத்துடன், இதுகுறித்து விளக்கம் அளித்து ஒரு வீடியோவையும் அந்த நிறுவனம் அனுப்பியுள்ளது. அதில், ''டிரம்ப் நாங்கள் சுத்தமான கிரீன் டீ பாக்கெட்டுகளை உங்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம். கிரீன் டீ உடலில் உள்ள தீய நச்சுக்களை அழிக்கவல்லவை. மனதையும், உடலையும் தூய்மைப்படுத்தி ஆரோக்கியத்தை திரும்பப் பெறவும் முடியும்.

மேலும், மனிதர்களை கிரீன் டீ புத்திசாலிகளாக மாற்றும். உங்கள் நலனுக்காகவும், அமெரிக்காவின் நலனுக்காகவும், உலகத்தின் நலனுக்காகவும் கிரீன் டீ அருந்துங்கள். உங்களை நீங்களே தூய்மைப்படுத்திக் கொள்வதற்கான காலம் இன்னும் கடந்துவிடவில்லை'' என கூறப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close