Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிரான்ஸில் வாகனத் தாக்குதல்... 80 பேர் பலி!

 

பாரீஸ்: பிரான்ஸ் நாட்டின் நீஸ் நகரத்தில், மக்கள் கூட்டத்திற்குள் கனரக வாகனம் புகுந்ததில் 80 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.

பிரான்ஸ் நாட்டின் நீஸ் நகரத்தில் பாஸ்டில் தினம் எனப்படும் பிரான்ஸ் தேசிய தினத்தை மக்கள் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அப்போது, நீஸ் நகரத்தின் முக்கிய சாலையில் சென்று கொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று, திடீரென ஒரமாக நின்று கொண்டிருந்த மக்கள் கூட்டத்திற்குள் புகுந்து, சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை மக்கள் மீது மோதி சாய்த்தபடி சென்றது.

இந்த விபத்தில், ஏராளமான மக்கள் சிக்கி, நசுங்கி பரிதாபமாக பலியாகினர். இதில், சுமார் 80 பேர் வரை உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

படுகாயம் அடைந்தவர்களில் பலரின்  நிலை மிகவும் மோசமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. மேலும், இந்த விபத்தை ஏற்படுத்திய கனரக வாகனத்தின் ஓட்டுநரை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர். அந்த கனரக வாகனத்தில் ஆயுதங்கள், கையெறி குண்டுகள் இருந்ததாக நீஸ் நகர தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தீவிரவாதிகளின் தாக்குதலா? என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனங்களும், இரண்டு ஹெலிகாப்டர்களும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டன. ஏராளமான சடலங்கள் சாலையில் சிதறிக் கிடக்கின்றன.

உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ள இந்த சம்பவத்திற்கு பிரான்ஸ் அதிபர் மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ