Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாகன தாக்குதல் எதிரொலி...பிரான்ஸில் மேலும் 3 மாதங்களுக்கு அவசரநிலை நீட்டிப்பு!

பாரீஸ்: நீஸ் நகரத்தில் கனரக வாகன தாக்குதல் நடத்தப்பட்டதன் எதிரொலியாக,பிரான்ஸில் மேலும் 3 மாதங்களுக்கு அவசர நிலை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை பிரான்ஸ்  அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே வெளியிட்டுள்ளார்.

பிரான்ஸ்  தலைநகர் பாரீசில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13-ம் தேதி இசைக் கச்சேரி அரங்கு, கால்பந்து மைதானம், ஹோட்டல்கள் உள்ளிட்ட 6 இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தக் கொடூர தாக்குதலில் 125 க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து, பிரான்ஸ் நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.

அதன் பின்னர், பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டு அவசரநிலை பிரகடனம் நீட்டிக்கப்பட்டது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வந்த அவசரநிலை சட்டக் காலம், வருகின்ற 26-ம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில், நேற்று இரவு நீஸ் நகரில் நிகழ்த்தப்பட்ட வாகன தாக்குதலில், 80க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலரின் நிலை மிகவும் மோசமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இதனால், இந்த தாக்குதலுக்கு பின்னர், தற்போது அமலில் இருந்து வரும் அவசரநிலை சட்டம், மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை  பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே வெளியிட்டுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ