Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'காஷ்மீர் விடுதலைக்காக உயிரிழந்தார் புர்ஹான் வானி'- பாகிஸ்தான் அறிவிப்பு!

காஷ்மீரில், ஹிஸ்புல் முஜாகீதின் இயக்கத்தின் கமாண்டர் புர்ஹான் வானி, பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், 'காஷ்மீர் விடுதலைக்காக அவர் உயிரிழந்தார்' என  குறிப்பிட்டுள்ளதாக பாகிஸ்தான் வானொலி தெரிவித்துள்ளது.

ஹிஸ்புல் முஜாகீதின் இயக்க கமாண்டர் புர்ஹான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, காஷ்மீரில் கடந்த ஒரு வார காலமாக வன்முறை வெடித்துள்ளது. இது குறித்து விவாதிப்பதற்காக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், தனது அமைச்சரவைக் கூட்டத்தை லாகூரில் இன்று கூட்டினார். 

இந்த கூட்டத்தில் பேசிய நவாஸ் ஷெரீப், ''காஷ்மீர் மக்கள்,  சுதந்திரத்துக்காகவும் விடுதலைக்காகவும் போராடி வருகின்றனர். புர்ஹான் வானி காஷ்மீர் விடுதலை போராட்டத்துக்காக போராடி உயிரிழந்துள்ளார். காஷ்மீர் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்,  ஜூலை 19ம் தேதி கறுப்பு தினமாக அனுஷ்டிக்கப்படும். சுதந்திரத்திற்காக போராடும் உரிமை காஷ்மீர் மக்களுக்கு  உண்டு. இந்தியா,  காஷ்மீர் மக்களை தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளது. அவர்களுக்கு பாகிஸ்தான் என்றும் ஆதரவு அளிக்கும் '' என்றார்.

 ''புர்ஹான் வானியை காஷ்மீர் சுதந்திரப் போராட்ட வீரர்'' என நவாஸ் குறிப்பிட்டதை பாகிஸ்தான் வானொலி உறுதி செய்துள்ளது.

மேலும் இந்தியா,  காஷ்மீரில் 7 ஆயிரம் துருப்புகளை இறக்கி கண்மூடித்தனமாக மக்களை கொன்று வருவதாகவும்,  ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் மக்கள் சுபிட்சமாக இருப்பதாகவும் நவாஸ் ஷெரீப் பேசியதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தானின் இந்த அறிவிப்புக்கு இந்திய வெளிறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ''பாகிஸ்தான் அறிவிப்பை நாங்கள் முற்றிலும் நிராகரிக்கிறோம். பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு வருவது அதிர்ச்சி அளிக்கிறது '' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close