Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

துருக்கியில் ராணுவ புரட்சி: கலவரத்தில் 42 பேர் பலி!

அங்காரா: துருக்கியில் ராணுவ புரட்சி நடந்து வருவதாகவும் தலைநகர் அங்காராவை  ராணுவத்தினர் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. ஆனால் துருக்கி அரசு அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. 

துருக்கி நாட்டில் மக்களால் தேந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரதமராக பினாலி எல்ட்ரீம் உள்ளார். இந்நிலையில், அரசை கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டு ராணுவத்தினர் நேற்று இரவு அறிவித்தனர்.

துருக்கியில் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தொலைக்காட்சி ஒன்றில் அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. மேலும் துருக்கி தலைநகர் அங்காராவில் அரசு மாளிகை ராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்தது. போஸ்பரஸ், சுல்தான் முகமது ஆகிய பாலங்கள் மூடப்பட்டு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.அங்காரா மற்றும் இஸ்தான்புல்லில் நடந்த தாக்குதல்களில் 42 பேர் கொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது.

விமான நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்கள் முடக்கப்பட்டு டேங்கிகளுடன் ராணுவத்தினர் ரோந்து செல்கின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல் துருக்கி நாட்டில் சமூக வலைத்தளங்களான பேஸ்புக், ட்விட்டர் மற்றும் யூடியூப் ஆகியவை முடக்கப்பட்டுள்ளது.

மேலும் துருக்கி தலைநகர் அங்காராவில் ராணுவத்திற்கும் அரசு தரப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. துருக்கி நாடாளுமன்றம் மீது ராணுவத்தினர் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல்கள் நடத்தி உள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இஸ்தான்புல் நகரில் உள்ள தஸ்கின் சதுக்கம் அருகே போலீசார் மற்றும் ராணுவத்தினர் இடையே கடும் துப்பாக்கிச் சூடு நடைபெறுகிறது. பெரிய அளவிலான வெடிசத்தம் கேட்பதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பொதுமக்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், துருக்கியில் ராணுவ நடவடிக்கை ஜனநாயகத்திற்கு விரோதமானது என அந்நாட்டு பிரதமர் பின்னாலி எல்டரீம் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், ராணுவத்தை தூண்டிவிடும் பின்னணியில் உள்ளவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என துருக்கி பிரதமர் தெரிவித்துள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ