Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டொனால்ட் ட்ரம்ப் - ஜோக்கர் ஹீரோ ஆன கதை!

ஒரு தயாரிப்பு சந்தைக்கு வருகிறது. அதைப்  பற்றிய பல்வேறு விமர்சனங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் அந்த நிறுவனமோ அந்தத்  தயாரிப்பைத் தொடர்ந்து விளம்பரப்படுத்தி வருகிறது. ஒரு கட்டத்தில் எந்தப்  பகுதியில் சந்தைப்படுத்த திட்டமிட்டார்களோ அந்தப்  பகுதியில் நல்ல வரவேற்பை பெறுகிறது. அதன்முன்பு வைக்கப்பட்ட பொது விமர்சனங்கள் தோற்றுப்  போயின. இது ஒரு தயாரிப்புக்கு மட்டுமல்ல. அமெரிக்காவின் குடியரசுக் கட்சி அதிர்பர் தேர்தலில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவித்திருக்கும் டொனால்ட் ட்ரம்ப்புக்கும் பொருந்தும்.

அமெரிக்காவில் ஆரம்பத்தில் ட்ரம்ப்பை கலாய்த்து மீம்ஸ்கள் வந்தன. அவர் மீது ஆக்ரோஷமான விவாதங்கள் முன் வைக்கப்பட்டன. அவரது கருத்துக்களை யாரும் ஏற்கவில்லை. ஆனால் ட்ரம்ப் தனது நிலைப்பாட்டில் இருந்து சற்றும் மாறவில்லை மூன்று விஷயங்களை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார் என‌ அமெரிக்க ஊடகங்களும், சமூக வலைத் தளங்களும் விமர்சிக்கின்றன. அவை, வெற்றி (WIN), ஒப்பந்தங்கள்(DEAL) மற்றும் எல்லையில் சுவர் கட்டுவது (Build a Wall) மட்டும்தான்.

இஸ்லாமியரை அமெரிக்காவை விட்டு ஒட்டு மொத்தமாக வெளியேற்ற வேண்டும் என்பது தொடங்கி, அமெரிக்காவை மீண்டும் உருவாக்குவோம் என்ற சர்வாதிகார போக்கையே வெளிப்படுத்தி வருகிறார் என பல விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இவர் தோல்விக்கு அமெரிக்காவே வித்திடுகிறது என உலக நாடுகள் நினைத்த போது அமெரிக்கர்கள், உலக மக்களின் மனநிலை வேறு, அமெரிக்கர்களின் மனநிலை வேறு என நிருபித்தனர். அதனால் தான் முக்கியமான மகாணங்களில் வேட்பாளர் தேர்தலில், ட்ரம்ப் வெற்றி வாகை சூடினார். குடியரசுக்  கட்சியின் வேட்பாளர் ஆனார்.

ட்ரம்ப் முன் வைக்கும் பிரசாரங்களை சிலர் விமர்சனம் செய்யும்போது,  அது ட்ரம்ப் ஆதரவாளர்களுக்கு சரி என்றே தோன்றியுள்ளது. அவர் கூறும் பொருளாதார கொள்கையை ஏற்கவில்லை என்பவர்களுக்கு அவரது பதில் இது தான். 'ஒரு காலத்தில் அமெரிக்காவின் பொருட்களால் உலகம் நிறைந்திருந்தது. இன்று உலகின் பொருட்களால் அமெரிக்கா நிறைந்துள்ளது என்று அமெரிக்காவின் பொருளாதாரம் - வேலைவாய்ப்பை ஒரே பிரசாரத்தில் காலி செய்கிறார்.

ஜான் ஆலிவரின் தொலைக் காட்சி நிகழ்ச்சியில் கலாய்க்கப்பட்டார் ட்ரம்ப். அவரை அமெரிக்காவின் மிகப்பெரிய பிசினஸ்மேன் என்கிறார்கள் சிலர். எத்தனை பிசினஸ்கள் தோல்வியில் முடிந்திருக்கின்றன தெரியுமா? 'மேக் டொனால்ட்  ட்ரம்ப் அகெய்ன்' என்று அவரது கோஷத்தை அவருக்கே திருப்பி கலாய்த்து 2 கோடி வீடியோ வியூஸை பெற்றார் ஜான் ஆலிவர். ஆனால் இதையெல்லாம் மக்கள் ரசித்தார்களே தவிர இவை ட்ரம்புக்கு எதிராக திரும்பவில்லை.மெக்சிகோவுக்கும் அமெரிக்காவுக்கு இடையே சுவர் எழுப்புவேன் என்ற போது முட்டாள் தனமான கருத்து என ஒரு புறம் விமர்சிக்கப்பட்டாலும் அவருக்கு ஆதரவு ஒவ்வொருநாளும் கூடிக்கொண்டேதான் போகிறது. இஸ்லாமியரை  நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்று அவர் கொக்கரித்ததை வழிமொழிவதைப் போல அவரது ஆதரவாளர்கள், பயங்காரவாதத்தை ஒடுக்க  ட்ரம்பால் மட்டுமே முடியும் என்கின்றனர்.

 'ஒபாமாவின் தேர்தல் பிரச்சாரத்தை காப்பி அடித்தார்'  என்ற விமர்சனத்தையும் முறியடித்து குடியரசுக் கட்சியின் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளர் ஆகியுள்ளார் ட்ரம்ப். ஆனால்  ஹிலாரி இன்னும் ஜனநாயக கட்சியில் தன்னை நிரூபிக்க  போராடி வருகிறார்.


என்ன செய்தார் ட்ரம்ப்


தன் மீதான விமர்சனங்களைத்  தனக்குச்  சாதகமாக மாற்ற ட்ரம்ப் என்ன செய்தார் என்பது தான். ட்ரம்ப் தனது நிலைப்பாடுகளை எந்த விமர்சனத்துக்காகவும் மாற்றிக் கொள்ளவில்லை. இது தான் ட்ரம்ப் ஆதரவாளர்களுக்குமே அவரை பிடிக்க முக்கிய காரணமானது.

ட்ரம்பின் பேச்சுத்  திறன் அவரது உத்திகளில் ஒன்று. பயப்படாத, தடையற்ற கம்பீரமான பேச்சு அவருக்கு. அதிலும் அமெரிக்காவின் முன்னேற்றத்தை வலியுறுத்தும் அவரின் திடமான உரைகள் அமெரிக்கர்களைப்  பெரிதும் கவர்ந்தது.

ட்ரம்பின் வெற்றிக்கு இன்னொரு காரணம், அவரது பிராண்ட் இமேஜ். தன்னைப்  பற்றிய தாக்கத்தை மக்கள் மத்தியிலும், அவருக்கு அதிக ஆதரவுள்ள மாகாணங்களிலும் குறையாமல் பார்த்துக் கொண்டார்.

அதேபோல் அவர் வலியுறுத்திய விஷயத்தை அவர் பின்பற்றவும்  செய்தார்.  சில இலக்குகளை எப்படியோ அடைவது என நினைத்து விட்டால், இலக்குகளை பெரிதாக வைத்துக்கொள்ளுங்கள் என்றார். அதேபோல் பெரிய இலக்குகளை நோக்கியே இருந்த ட்ரம்ப் மீதான விமர்சனங்கள் பொய்யாகின.

மற்ற நாடுகளின் கலாச்சாரமும், அமெரிக்க கலாச்சாரமும் வேறு. நமக்கு சரியில்லை என்று தோன்றுவது அமெரிக்கர்களுக்கு சரியாக தோன்றலாம். இதனையே தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டார் ட்ரம்ப். அமெரிக்கர்களை  ஊக்குவிக்கும் விதமாக பிரசாரம் செய்த ட்ரம்ப் தனது ஆதரவை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

 ஒருவருக்கு சத்தமாக இருப்பது இன்னொருவருக்கு இசையாக இருக்கும் என்பது தான் கூற்று. மற்ற நாட்டினரும் ட்ரம்ப் ஒரு வியாபாரி, உளறுகிறார் என பல விமர்சனங்களை வைத்தாலும் அமெரிக்கர்களில் ஒரு பெரும் பிரிவினருக்கு ட்ரம்ப் பிடித்தவராக உள்ளார். அமெரிக்கா முதலாளித்துவ நாடு என்ற பிம்பத்திலிருந்து தன்னை விலக்கி கொள்ள விரும்பாத நாடு. ட்ரம்ப் போன்ற வியாபாரிகளை அமெரிக்கா தள்ளி வைக்காது என்பது அமெரிக்காவில் நிலவும் சுழல். ஆனால் ட்ரம்பும் ஒரு விஷயத்தை மறக்கக்கூடாது.அதேசமயம் ஒபாமாவின் இரண்டாவது வெர்ஷனாக தன்னை பிரதான படுத்தி வரும் ஹிலாரிக்கும் ஆதரவு பெருகிவருகிறது. அமெரிக்கா முதல் பெண் அதிபரை எதிர்பார்க்கிறது என்ற அலை  அமெரிக்காவில் நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

குடியரசு கட்சியில் மற்ற வேட்பாளர்களின் வாக்கு விகிதம்


குடியரசு கட்சியில் ட்ரம்பின்  வாக்கு விகிதம் மாகாண‌ம் வாரியாக‌

 

 

ஜனநாயக கட்சியில் ஹிலாரியின் வாக்கு விகிதம் மாகாண‌ம் வாரியாக‌

 

தகவல் : நியூயார்க் டைம்ஸ்

ட்ரம்ப் ஒரு ஜோக்கர், காமெடி செய்கிறார் என்ற விமர்சனங்களைத்  தாண்டி இன்று அமெரிக்கர்களில் ஒரு பகுதிக்கு ட்ரம்ப் ஹீரோவாக தெரிகிறார். எப்போதுமே அரசியலில் இரண்டு விஷயங்கள் வெற்றி பெறும். ஒன்று ஒருவரை விரும்பி  வாக்களிப்பது. மற்றறொன்று இவரை பிடிக்காது அதனால் அவருக்கு போட்டியாக யார் நின்றாலும் வாக்களிப்பேன் என்பது. இரண்டாவது நிலை ட்ரம்ப், ஹிலாரி இருவருக்குமே இந்த விஷயம் தலைக்கு மேல் கத்தியாகதான் அச்சுறுத்திவருகிறது.
 
மக்களுக்கு யாரை அதிகம் பிடிக்காமல் போகிறதோ அவரது எதிராளிதான் ஜெயிப்பார் என்பதுதான் தற்போதைய நிலை. நவம்பரில் தேர்தல். அதற்குள் தங்களின் செல்வாக்கைக்  கூட்டிக்கொள்ள இருவருமே முயற்சி செய்வார்கள்.ச.ஸ்ரீராம்

ஓவிய‌ம்: ப்ரேம் டாவின்ஸி

 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ