Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மலேசிய கடலில் படகு கவிழ்ந்து விபத்து - 8 பேர் பரிதாப பலி, 20 பேர் மாயம்

கோலாலம்பூர்: மலேசியாவின் கடற்கரை மாகாணமான ஜோஹருக்கு அருகே கடலில் எழுந்த ராட்சத அலையில் சிக்கி படகு ஒன்று விபத்துக்குள்ளாகியது. அதில் பயணம் செய்தவர்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின்  உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், கடலில் மூழ்கி மாயமான 20 பேரை மீட்புப் படையினர் தேடிவருகின்றனர்.

மலேசியாவின் கடற்கரை மாகாணமான ஜோஹர், இந்தோனேசியாவின் கடல்வழி எல்லையையொட்டி அமைந்து உள்ளது. அதனால், இந்தோனேசியர்கள் எளிதாகக் கடல்வழியாக எல்லையைத் தாண்டி சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் குடியேறி வருவது வழக்கம்.

மலேசியாவில் வாழ்ந்து வரும் 20 லட்சம் இந்தோனேசியர்களில், பெரும்பாலானோர் இப்படியாக சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் தான். அப்படி மலேசியா வந்த இந்தோனேசியர்கள் 62 பேர், மீண்டும் இந்தோனேசியா செல்வதற்காகக் கடந்த சனிக்கிழமை இரவு படகில் புறப்பட்டுள்ளனர்.

அவர்கள் சென்ற படகு, ஜோஹர் மாகாணத்துக்கு அருகே சென்றபோது கடலில் எழுந்த ராட்சத அலையில் சிக்கி இருக்கிறது. சிறிது நேரத்தில் அந்தப் படகு கவிழ்ந்து நீரில் மூழ்கி இருக்கிறது.

இந்நிலையில், நேற்று காலை கப்பலில் ரோந்து சென்ற கடலோர காவல்படையினர், படகு கவிழ்ந்து கிடப்பதைக் கண்டு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கடல் நீரில் தத்தளித்தபடி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 34 பேரை அவர்கள் பத்திரமாக மீட்டிருக்கின்றனர்.

அத்துடன், கடல் நீரில் மூழ்கி உயிரிழந்த 8 பேரின் உடல்களையும் ரோந்து சென்ற கடலோர காவல்படையினர் மீட்டிருக்கின்றனர். முதற்கட்ட விசாரணையில், அந்தப் படகில் பயணம் மேற்கொண்ட 20 பேர் காணாமல் போயிருப்பது தெரிய வந்திருக்கிறது. மேலும், அவர்களைத் தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close