Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில் 19 பேர் படுகொலை! - ஜப்பான் துயரம்

டோக்கியோ: ஜப்பான் நாட்டில் மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில் புகுந்த இளைஞர் ஒருவர்   அங்கிருந்தவர்களைக் கண்மூடித்தனமாகக் கத்தியால் குத்தியதில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.  மேலும், 45 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகில், கனகவா மாகாணத்தின் சகமிஹரா நகரில் மனவளர்ச்சி குன்றிய ஜப்பனீஸ் மாற்றுத்திறனாளிகள் இல்லம் உள்ளது. இந்த இல்லத்தில், கத்தியுடன் நள்ளிரவு வாக்கில் நுழைந்த 26 வயது இளைஞர் ஒருவர், அங்கு உறங்கிக் கொண்டிருந்த மாற்றுத்திறனாளிக் குழந்தைகள் மீது வெறித்தனமாக கத்தியால் குத்தி உள்ளார்.

அதன் பின் அங்கிருந்து வெளியேறிய அந்த இளைஞர், அருகில் உள்ள காவல்நிலையத்தில் கத்தியுடன் சென்று சரணடைந்து, தான் கத்தியால் குத்தியதை ஒப்புக் கொண்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து, உடனடியாக மாற்றுத்திறனாளிகள் இல்லத்துக்குக் காவல்துறையினர் சென்று பார்த்தபோது, அங்கே 19 பேர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்து கிடந்துள்ளனர்.


மேலும், அங்கே படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்ட போலீசார், அவர்களை உடனடியாக ஆம்புலன்சில் ஏற்றி டோக்கியோவில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்திருக்கின்றனர்.

இந்த துயரச் சம்பவத்தில் 45 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், அவர்களில் 28 பேரின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அந்த இளைஞர், தாக்குதலுக்கு உள்ளான மாற்றுத்திறனாளிகள் இல்லத்தின் முன்னாள் பணியாளர் என தெரியவந்துள்ளது. அந்த இளைஞரிடம்  போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ