Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'அவன் வருவானா...?' - போக்கிமானுக்கு காத்திருக்கும் இந்திய கேமர்கள்!

'ஒரு  மாசத்துக்கு முன்னாடி, எப்படி வந்தேனோ, அப்படியே போயிட்டேன்...'  என்கிற ரீதியில் ஆகிவிட்டது போக்கிமான் கோ விளையாட்டு. ஒரு மாதத்தில் உலகம் முழுவதும், மொபைல்வாசிகளை பித்துப் பிடித்தது போல் ஓடவிட்டது போக்கிமான். பல்வேறு சர்ச்சைகள், திருட்டு சம்பவங்கள், விபத்துக்கள் என எல்லாவற்றையும் கடந்து, ஹிட் அடித்தது போக்கிமான்.

போக்கிமான் கோ என்னான்னு தெரியாதவங்களுக்கு ஒரு சின்ன இன்ட்ரோ...

'போக்கிமான் கோ' மிகவும் ஜாலியான விளையாட்டு. இதன் apk ஃபைலை, உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்ததும், ஜிபிஎஸ் துணையுடன், உங்கள் இருப்பிடத்தை குறித்து வைத்துக்கொள்ளும். விளையாடுவது ஆணா, அல்லது பெண்ணா என்பதற்கு ஏற்ப, வெர்ச்சுவல் பெயரை நீங்கள் சூட்டிக்கொள்ளலாம்.

அந்த வெர்ச்சுவல் மனிதன், நிஜ உலகில் இருக்கும் பூச்சிகளைத் தேடிப் பிடிக்க வேண்டும். அந்தப் பூச்சிகளுக்குத்தான் 'போக்கிமான்' என்று பெயர். உங்களைச் சுற்றி எங்கெல்லாம் போக்கிமான்கள் இருக்கின்றனவோ அந்த இடங்கள் நீலநிற பாக்ஸுகளாகத் தெரியும். அந்த நீலநிற பாக்ஸை க்ளிக் செய்தால் அந்த இடம் எது என்பதை, படத்துடன் லொக்கேஷனையும் காட்டும். இனி கோழி பிடிப்பதுபோல போக்கிமான்களை நிஜ உலகில் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதைத் தேடிக் கண்டுபிடித்து விட்டால் `Gotcha' என்கிறது இந்த ஆப். அதாவது `பிடிச்சுட்டேன்டா டேய்..!' என அர்த்தம். இவ்வளவு தான் இந்த கேம்.

ஏமாந்த கேமர்கள்

இந்தியாவில் இந்த விளையாட்டு வெளியாகாத போதும், ஆண்டிராய்டு மொபைல் என்பதால், மொபைல்வாசிகள் apk ஃபைலை, கூகுளில் இருந்து டவுன்லோடு செய்து, விளையாட ஆரம்பித்தார்கள். சென்னையின் பல்வேறு இடங்களில், பலர் இதை விளையாடினார்கள். ஆனால், பைரசி அப்ளிகேசன், தன் வேலையை காட்டிவிட்டது. கடந்த சில நாட்களாகவே பலருக்கு, போக்கிமான் கோ விளையாடுவதில் பிரச்னை இருந்தது. சமயங்களில், கூகுள் மேப் மட்டும், வெர்ச்சுவல் திரையில் காட்டப்படும், ஒரு போக்கிமானையும் நம்மால் காண முடியாது. சிலர் 10 கி.மீ தூரம் எல்லாம் பயணித்து பார்த்தார்கள். ம்ஹூம். ' திரும்பி வருவான்டா ' என நம்பிக்கையோடு காத்திருந்த மொபைல் கேமர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

காரணம், பைரசியாக வெளியான கேமை, இந்தியாவில் இருந்து அகற்றி விட்டது நின்டெண்டோ நிறுவனம். செப்டம்பர் முதல் வாரத்தில், போக்கிமான் விளையாட்டு, இந்தியாவில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படலாம் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதுவரையில், நாம் காத்திருந்துதான் ஆக வேண்டும்.

மிஸ் யூ போக்கிமான்...

- கார்த்திகேஜி

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

சிவாஜி குறித்து எம்.ஜி.ஆரின் சிலாகிப்பு! #HBDSivaji #NadigarThilagam
placeholder

ல பெண்களைக் கெடுத்துப் பொய் சொல்லும் பாத்திரம் அது. ஆனால், ஒவ்வொரு கட்டத்திலும் மக்களைத் தன்பால் இழுக்கு மளவுக்கு, ‘ஆங்கிலப் பாணி’ என்று உயர்த்திச் சொல்லப்படும் தகுதியோடு நடித்துப் புகழ்பெற்றார். இன்று, வேறு கோணங்களில் நின்று பார்ப்பவர்கள் சிலர், “ஆங்கிலப் படங்களைப் பார்த்து, அந்தப் பாத்திரங்களைப் போலவே, அந்தப் பாணியிலேயே நடிக்கிறார்’ என்று கூறுகிறார்கள். ஆனால், அந்தக் காலத்தில் (‘திரும்பிப் பார்’ படமெடுத்த காலத்தில்) சிவாஜி அவர்கள் அதிக ஆங்கிலப் படங்களை எப்படிப் பார்த்திருக்க முடியும்? இப்போது ஆங்கிலப் படங்களில் நடிக்கும் நடிகர்கள் அப்போது எங்கே இருந்தார்கள்? இப்போது வருகிற படங்களைப் போல் அப்போது வருவதுண்டா? ஏற்று நடிக்கும் பாத்திரங்களுக்கு அவர் அற்புதமான மெருகேற்றி ஒப்புயர்வற்று நடிக்கும் போது, அந்த நடிப்புக்குப் பிறப்பிடமான பயிற்சியையும், தேர்ச்சியையுமல்லவா நாம் போற்ற வேண்டும்.

உங்க ஏரியா எப்படி இருக்கு? உள்ளாட்சி சர்வே முடிவுகள்..!

MUST READ