Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'யுவர் ஆர்டர் ப்ளீஸ்!' - ஒபாமா மகளின் புதிய பணி

மெரிக்க அதிபர் ஒபாமாவின் மகள்,  ஹோட்டல் ஒன்றில் சர்வராக வேலை பார்த்து வருகிறார்.

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இளைய மகள் நடாஷா  என்ற சாஷா.  தற்போது இவருக்கு 15 வயதாகிறது. அமெரிக்காவில் இப்போது கோடைவிடுமுறை ஆகும்.  இந்த சமயத்தில் நடாஷா ஹோட்டல் ஒன்றில்  பகுதி நேர வேலை செய்ய முடிவெடுத்தார். இதையடுத்து, மாசாஷேசூட்ஸ் மாகாணத்தில் மார்தாஸ் வின்யார்ட் என்ற தீவில் உள்ள  நான்சி என்ற  கடல் உணவகத்தில், சர்வர் வேலையில் சேர்ந்துள்ளார்.

அங்கு அவர், நான்சி ரெஸ்ட்டாரென்டின் சீருடையை அணிந்தவாறு வாடிக்கையாளர்களுக்கு உணவு சப்ளை செய்கிறார். பில்லிங் பணியையும் மேற்கொள்கிறார். காரில் இருந்து கொண்டு ஆர்டர் செய்பவர்களுக்கும் நடாஷா உணவு வகைகளை சென்று கொடுக்கிறார். பிசியான மதிய உணவு வேளையின் போது, மேஜைகளை சுத்தம் செய்யும் பணியிலும் நடாஷா ஈடுபடுகிறார்.  அவருடன் சேர்ந்து 6 பணியாளர்கள் அந்த ஹோட்டலில் பணிபுரிகின்றனர்.  தினமும் நான்கு மணி நேரம் நடாஷா இந்த ஹோட்டலில் சர்வராக பணிபுரிகிறார்.

நடாஷா ஹோட்டலில் பணி செய்வது போல  புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதனை 'பாஸ்டன் ஹெரால்ட்' பத்திரிகையும் உறுதி செய்தி வெளியிட்டுள்ளது.
 

இந்த தீவு ஒபாமாவின் ஃபேவரைட்  ஓய்வு இடம் ஆகும்.. கோடை காலத்தில் இங்குதான் ஒபாமா, குடும்பத்துடன் ஓய்வெடுப்பார். நான்சி உணவகம், ஒபாமாவின் நண்பருக்கு சொந்தமானது. ஒபாமா அடிக்கடி குடும்பத்துடன் இந்த ஹோட்டலுக்கு வருகை தருவது வழக்கம்.  ஒபாமாவின் பதவிக் காலம் விரைவில் முடிவடைய உள்ளது . இவ்வளவு காலமும் பாதுகாப்பு கெடுபிடிகளுக்குள் ஒபாமாவின் மகள்கள் இருந்தனர். தற்போது அவர்களை சராசரி வாழ்க்கைக்குள் கொண்டு வர திட்டமிட்டு  ஒபாமாவின் மனைவி , மிட்செல், நடாஷாவை ஹோட்டலில் சர்வராக பணியாற்ற அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. 

நடாஷா பணிபுரியும் உணவகத்துக்கு வெளியே, பாதுகாப்பு அதிகாரிகள் எஸ்யூவி ரக கார்களில் அமர்ந்து கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.  நடாஷா பணி முடிந்து, பாதுகாப்பு அதிகாரிகளுடன் காரில் வீடு திரும்புகிறார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ