Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

போதைப் பொருள் கடத்தல்: நீதிபதிகள் சரணடைய பிலிப்பைன்ஸ் அதிபர் வலியுறுத்தல்!

மணிலா: பிலிப்பைன்ஸில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள நீதிபதிகள் மற்றும் போலீசார் உடனே அரசிடம் சரணடைய வேண்டும் என்று அந்நாட்டு அதிபர்  ரோட்ரிகோ டியூடெட்ரே வலியுறுத்தியுள்ளார்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் புதிய அதிபராக ரோட்ரிகோ டியூடெட்ரே பதவி ஏற்றுள்ளார். பதவியேற்றது முதல், இவர் போதை பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார்.அண்மையில்தான் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 200க்கும் மேற்பட்டோரை போலீசார் என்கவுன்ட்டர் செய்தனர். இது போதைப்பொருள் கடத்தும் நபர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், போதைப் பொருள் கடத்தல்காரர்களைச்  சுட்டுக் கொல்ல பொதுமக்களை அனுமதிப்பதாக சமீபத்தில் பரபரப்பான அறிவிப்பையும் வெளியிட்டார்.

இதனையடுத்து,  நாட்டை சீரழிக்கும் போதைப்பொருள் கடத்தல், விற்பனை செய்தல் உள்ளிட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட 160 பேரின் பெயர்களை பகிரங்கமாக வெளியிட்டார். அவர்களில் நீதிபதிகள், மேயர்கள், போலீஸ் அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள், எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களும் அடங்குவர்.

அவர்கள் தானாக வந்து சரண் அடைய வேண்டும். இல்லாவிடில் கடும் விளைவுகளைச்  சந்திக்க வேண்டும் என்றும் அதிபர் எச்சரித்துள்ளார். மேலும் அவர்களின்  பாதுகாப்பு அதிகாரிகளையும், துப்பாக்கி அனுமதியையும் ரத்து செய்யவும்  உத்தரவிட்டுள்ளார். அதிபரின் இத்தகைய நடவடிக்கை அங்கு பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close