Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வடக்கு-கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைக்க முதல்வர் விக்னேஸ்வரன் வலியுறுத்தல்!

கொழும்பு: இலங்கையில் உருவாக்கப்படும் புதிய அரசமைப்புச் சட்டத்தில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை மீண்டும் ஒன்றிணைத்து கூட்டாட்சி முறை அமல்படுத்தப்பட வேண்டும் என்று முதல்வர் விக்னேஸ்வரன் வலியுறுத்தி உள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் பேசும்போது, ''இலங்கையில் புதிதாக இயற்றப்படவிருக்கும் அரசியல் அமைப்புச் சட்டத்தில், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் மாகாணங்களில் கூட்டாட்சி முறை அமல்படுத்த தமிழ் மக்கள் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். இதற்காக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மீண்டும் ஒன்றிணைக்கப்பட வேண்டும்.

வடக்கு-கிழக்கு ஒருங்கிணைந்த தமிழ் பேசும் பகுதி என்பது அந்தப் பகுதி மக்களிடையே வருங்கால ஒற்றுமைக்கும், சிங்களர் குடியேற்றத்தைத் தடுத்து, தமிழ் பாரம்பரியம் நிலைத்து நிற்பதற்கும் மிக்க அவசியமான ஒன்று என்பதை தமிழ் மக்கள் பேரவை மக்கள் மனதில் நிலைநிறுத்த வேண்டும்.

முஸ்லிம்கள் வட-கிழக்கு இணைப்பை ஏற்க மாட்டார்கள் என்று காரணம் காட்டி, பெரும்பான்மை சிங்கள அரசு இரு மாகாணங்களையும் இணைப்பதைத் தவிர்க்கவும், சுயாட்சி முறையை அமல்படுத்தவும் மறுக்கக் கூடாது. ஒருங்கிணைந்த தமிழர் மாகாணத்தில், முஸ்லிம் மக்களுக்கென தனி நிர்வாக அதிகார சபையை வழங்குவதில் தமிழ் மக்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இருக்க முடியாது. இறுதிகட்டப் போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்வதில் இலங்கை அரசின் பங்கை தமிழ் மக்கள் ஆணித்தரமாக வலியுறுத்த வேண்டும்" என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close