Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிதி மோசடி வழக்கு... ராஜபக்சே மகன் மீண்டும் கைது

கொழும்பு: சட்ட விரோத பண பரிவர்த்தனை குற்றச்சாட்டில், இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் மகன் மீண்டும் கைது செய்யப்பட்டு உள்ளார்.

இலங்கையின் அதிபராக 10 ஆண்டு காலம் பதவி வகித்த ராஜபக்சே, கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தார். சிறிசேனா அதிபர் ஆனதை தொடர்ந்து, ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் அவருடைய குடும்பத்தினர் செய்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவருக்கு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. அதன்படி, அவரும் விசாரணைக்கு உத்தரவிட்டார்.

ராஜபக்சேயின் மூத்த மகன் நாமல் ராஜபக்சே மீதான சட்டவிரோத பண பரிவர்த்தனை குற்றச்சாட்டும் இவற்றில் அடங்கும். அவர் இரண்டு நிறுவனங்களில் முதலீடு செய்ததில் நடந்த சட்டவிரோத பண பரிவர்த்தனை பற்றி நிதி குற்றப்பிரிவு போலீசார் அவரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தி இருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று நாமல் ராஜபக்சேயை நிதி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவரை வருகின்ற 22-ம் தேதி வரை சிறையில் அடைக்க கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

நாமல் கைது செய்யப்படுவது இது இரண்டாவது முறை ஆகும். கடந்த மாதம் அவர் ரூ.4,225 கோடி அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில் நடைபெற்ற நிதி முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டார்.

இதில் 7 நாட்கள் சிறைவாசத்துக்குப் பின் ஜாமீனில் வெளிவந்தார்.  இதேபோல் ராஜபக்சேயின் தம்பியும், நாமல் ராஜபக்சேயின் சித்தப்பாவுமான பசில் ராஜபக்சே, 3 தடவை கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ