Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

6 கண்டங்கள், 44 நாடுகள்... உலகம் சுற்றும் இளம்பெண்ணின் நேரடி அனுபவம்!

ரே ஒரு கேமராவுடன் 44 நாடுகள், 6 கண்டங்கள் என தனியே பயணத்தை மேற்கொண்டுள்ளார், கலிஃபோர்னியாவைச் சேர்ந்த அலிசா ரமோஸ்.

யாரையும் துணைக்கு அழைத்துச் செல்லாமல் தனியே இத்தனை நாடுகள் மற்றும் கண்டங்களைச் சுற்றி வந்திருக்கிறார். அலிசா, தான் சென்று வந்த நாடுகளின் படங்கள் மற்றும் அவற்றின் குறிப்புகள் குறித்து எழுத தனியே பிளாக் ஆரம்பித்து, அதில் படங்களைப் பதிவேற்றி எழுதி வருகிறார். உலகத்தில் பலரும் பயணம் செய்து வந்தாலும், அது பெரிய அளவில் வெற்றி பெறுவதில்லை. ஆனால், இவர்தான் உலகின் பயணத்தில் வெற்றி பெற்ற பெண் என்கிற பெயரையும், புகழையும் தக்க வைத்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

இணையதளங்களில் மிகவும் பிரபலமாக இருக்கும் இவருக்கு, இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 60,000 க்கும் மேற்பட்ட ஃபாலோயர்ஸ் இருக்கிறார்கள்.

இந்தப்பயணத்தை தனியே அவர் மேற்கொண்டதற்கான காரணத்தையும் கூறுகிறார்...

" என்னுடன் தோழிகள் யாராவது வருவார்களா என பெரிதும் எதிர்பார்த்து பல வருடங்கள் காத்திருந்தேன். ஆனால், யாரும் என்னுடன் வரத் தயாராக இல்லை. ஏதோ ஒரு விதத்தில் பயணம் செய்ய பயந்தார்கள். அவர்களுக்காக என்னுடைய கனவையும், உறுதியையும் நான் தளர்த்திக் கொள்ள விரும்பவில்லை.

எனவேதான் இறுதியாக யாருடைய துணையையும் எதிர்பார்க்காமல் நானாக, தனியே பயணப்பட்டேன். என்னுடைய முதல் பயணத்தை தென் ஆப்பிரிக்கா நோக்கி தொடர்ந்தேன். இதற்காக, ஆறு மாதங்கள் அங்கே ஃப்ரீலான்ஸராக, பாலிவுட்டில் ஜூனியர் விளம்பரத் தூதராக தொடர்ந்து பணிபுரிந்தேன். அங்கேயே எழுதுவதற்கான வாய்ப்பும் கிடைத்தது. அதுதான் நான் பிளாக் ஆரம்பிப்பதற்கு உதவியாகவும் இருந்தது. நான் என்னுடைய பிளாக்கில்,  'தனியொரு பெண்ணாக இந்த நாட்டிற்கு பயணம் செய்கிறேன்' என்று எழுதியிருந்தேன். இதற்காக பலரும் தவறான கேள்விகளையும், அர்த்தங்களையும் எடுத்துக் கொண்டு, என்னிடம் தவறாக நடக்க முற்பட்டார்கள். பல நாடுகளுக்கு தனியே பயணம் செய்ய நேரும் போது, பெண்களுக்கே உண்டான நெருக்கடியான சூழலை நான் சந்திக்க நேர்ந்தது. பல இரவுகளை அழுகையோடும், பயத்தோடும் கழிக்க வேண்டியிருந்தது. ஆனால், எக்காரணம் கொண்டும் பின் வாங்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த நான்,  எனக்குப் பிடித்ததை நான் செய்து கொண்டிருக்கிறேன் என்கிற நம்பிக்கையை  எப்போதும் கொண்டிருந்தேன். அதுதான் என்னை இயக்கிக் கொண்டும் இருந்தது.  

இந்தியாவிற்குச்  சுற்றுப் பயணம் மேற்கொள்கிறேன் என்று என் நண்பர்களிடம் சொன்னபோது, தவறான விஷயங்களையே பலரும் சொன்னார்கள். ஆனால், நான் இந்தியா வந்து பல இடங்களைச்  சுற்றிப் பார்த்தபோது, 'ஆசிய நாடுகளிலேயே இந்தியாவைப் போன்ற சுற்றுலாத்தலம் வேறு ஏதும் இல்லை' என்றே சொல்வேன். 'அந்த அளவுக்கு கலாசாரத்தையும், வாழ்க்கைக்கான பல விஷயங்களையும் இந்தியா பின்பற்றி வருகிறது' என்றே சொல்வேன். மனசாட்சியோடு சொல்லவேண்டுமானால்...என்னை மிகவும் கவர்ந்த நாடு இந்தியா!

இந்தியாவில் டெல்லி, ஆக்ரா, ஜெய்ப்பூர், புஷ்கர், ஜோத்பூர், உதய்ப்பூர், மும்பை மற்றும் கோவா என பல இடங்களைச் சுற்றிப் பார்த்திருக்கிறேன்.  இப்படி பல இடங்களை சுற்றினாலும் ராஜஸ்தானை எனக்கு மிகவும் பிடித்த இடமாக நினைக்கிறேன். ஜெய்ப்பூர் சென்றபோது எனக்கு அங்கிருந்த அரண்மனை மிகவும் கவர்ந்தது. முதன் முதலில், அப்படி ஒரு அரண்மனையை ஜெய்ப்பூரில்தான் பார்க்கிறேன். அங்குள்ள கலைநயம்  என்னை மிகவும் கவர்ந்தது. ஜெய்ப்பூர் மக்கள், தங்களின்  லைஃப் ஸ்டைலில், ஒவ்வொன்றிலும் கலை நயத்தைப் பிரதிபலிக்கிறார்கள். அங்கே நான் வளையல்களை வாங்கினேன். ஒவ்வொரு நாட்டிலும் மொழி, மதம் என பல வித்தியாசங்கள் இருக்கும். இங்கு எனக்கு மிகவும் பிடித்தது சேலை. இங்குதான் சேலை எப்படி கட்டுவது என்று தெரிந்து கொண்டேன். அதே போல உணவு வகைகளிலும் வித்தியாசம்  காட்டியிருக்கிறார்கள் இந்தியர்கள். எனக்கு இங்குப் பிடித்த உணவு 'பன்னீர் பட்டர் மசாலா வித் கார்லிக்', நாண், மசாலா டீ, ஸ்வீட் லஸ்ஸி போன்றவை.

இப்படி தனியாக என்னைப் போன்று பயணம் செய்ய நினைப்பவர்கள் செய்யவேண்டியது, தனியாகவே  செல்ல முடிவெடுத்துவிட்டால் அந்த இடத்தைப் பற்றி வெப்சைட்டில் பார்த்து,  படித்து தெரிந்து கொள்ளுங்கள். பயணம் புரிய நினைக்கும் பெண்கள் முதலில் பார்க்கவேண்டியது சேஃப்டி. அந்த சமயம் பயணத்தின் போது ஒரு பெண்ணாக மிகவும் பயந்தேன். தனியாகப்  பயணம் செய்திருப்பவர்கள் எழுதியிருக்கும் அனுபவங்களை முதல் படித்து தெரிந்து கொள்ளுங்கள். பயணம் செய்ய வேண்டும் என்று ஆசை இருந்தால் அதன் மீது விருப்பம் இருந்தால், 'ஜஸ்ட் டூ இட்' என்கிறார் அலிசா.

- வே.கிருஷ்ணவேணி

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.

MUST READ